கேரளத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக இந்திய விமானப் படை ரூ.20 கோடி ரூபாய் வழங்கியுள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.


தற்போது மழை நின்று  விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.


கடும் வெள்ள சேதத்தில் சிக்கித் தவித்திருந்த கேரள மக்களை மீட்பதில் இந்திய விமானப் படை பெரும்பங்காற்றியது. குழந்தைகள், கர்ப்பிணிகள், ஊனமுற்றோர் என பல தரப்பினரையும்  ஹெலிகாப்டர் மூலம்  விமானப் படை மீட்டது. மீட்பதோடு கடமை முடிந்ததாகக் கருதாமல் 20 கோடி ரூபாயை நிவாரண நிதியாக இந்திய விமானப் படை வழங்கியுள்ளன. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்த ஏர் மார்ஷல் சுரேஷ் இந்திய விமானப் படை சார்பில் 20 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.