இந்திய விமானப்படையின் துணை தளபதியாக ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா இன்று பதவியேற்றுக் கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய விமானப்படைக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் ரபேல் போர் விமான இறுதிக்கட்ட பேரத்தில் முக்கிய பங்காற்றிய ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா இந்திய விமானப்படையின் துணை தளபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள விமானப்படை தலைமை அலுவலகத்தில் துணை தளபதியாக அவர் பதவியேற்றுக் கொண்டார். 


ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா 4250 மணி நேர அனுபவம் கொண்டவர் எனவும், இந்திய விமான படையின் 26-வகை விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 


பங்களாதேஷின் கட்டளை மற்றும் ஊழியர் கல்லூரியில், பாதுகாப்புப் பிரிவு படிப்பில் முதுகலைகளை பட்டம் நிறைவு செய்தார்.


ஏர் மார்ஷல் பதவியில் அடங்கும் முக்கியமான நியமனங்கள் பலவற்றை ராகேஷ் குமார் சிங் தக்கவைத்துள்ளார். அதாவது ஜாகுவார் படை கட்டளை மற்றும் விமான மற்றும் கணினி சோதனை அமைத்தல், தலைமை சோதனை பைலட் மற்றும் தேசிய விமான பரிசோதனை மையத்தின் திட்ட இயக்குநர், விமான சோதனை படை முதன்மையான விமானப் படை நிலையம், கமாண்டிங் அதிகாரி லைட் காம்பாட் ஏக்கர் ஆகிய பதவிகளை தக்கவைத்துளார்.


தனது வாழ்க்கை பயணதில் சிறப்பாக செயல்பட்ட ராகேஷ் குமார் சிங் பதவ்ரியாவிற்கு பரம விஷிஸ்ட சேவா பதக்கம், அதி விஷிஷித் சேவா பதக்கம் மற்றும் வாயு சேனா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.