புதுடெல்லி (New Delhi) : இந்திய விமானப்படையின்  வெஸ்டர்ன் ஏர் கமாண்ட் (WAC)பிரிவின் புதிய தலைவராக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி (Air Marshal VR Chaudhari)நியமிக்கப்பட்டுள்ளார், இந்த படை பிரிவு லடாக் செக்டார் மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் வான்வழி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறது என அதிகாரிகள்  PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவுத்ரி தற்போது ஈஸ்டர்ன் ஏர் கமாண்டில் மூத்த விமானப் பணியாளர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஆகஸ்ட் 1 ஆம் தேதி இவர் பதவி ஏற்பார். தற்போது  ஏர் மார்ஷல் பி சுரேஷ் இதன் தலைவராக உள்ளார். 


ALSO READ | முப்படைகள் ஒருங்கிணைந்து செயல்பட வருகிறது நாட்டின் முதல் Theater Command...!!!


சீனாவுடனான எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில்,  கிழக்கு லடாக்கில் மேலும் படைகள் அனுப்பப்பட்டு வரும் நிலையில் இவர் பதவி ஏற்கிறார். 


கடந்த சில வாரங்களாக கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இரவு நேரத்தில் போர் விமானங்கள் மூலம் ரோந்து பணிகளை IAF மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே விமானப்படை அனைத்து முன்னணி போர் விமானங்களையும், Sukhoi 30 MKI, Jaguar மற்றும் Mirage 2000 ஆகிய விமானங்களை லடாக் எல்லைப்புறத்தில் உள்ள படை தளங்களிலும், லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் () பல இடங்களில் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் (LAC) பகுதிகளில் நிறுத்தியுள்ளது.


ரஃபேல் (Rafale) கையகப்படுத்தும் நடவடிக்கையில்  ஏர் மார்ஷல் சவுத்ரியும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ |  சீனாவில் வெளியிடப்படும் பாலிவுட் படங்களின் நிலை என்ன.....!!!


தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான ஏர் மார்ஷல் சவுத்ரி டிசம்பர் 29, 1982 அன்று இந்திய விமான படையின் போர் விமானங்களை இயக்க நியமிக்கப்பட்டார். அவர் MiG-21, MiG-23MF, MiG-29மற்றும் SU-30MKI உள்ளிட்ட பல விமானங்களை இயக்கியுள்ளார்.