விமான பயணிகளுக்கு ஒரு நற்செய்தி. இனி நீங்கள் அதிக பாதுகாப்பாக விமானங்களில் பயணிக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமான பயணம் (Air Travel) இப்போதிருப்பதை விட இன்னும் பாதுகாப்பாக மாறவுள்ளது. சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. DGCA, விமான நிறுவனங்களின் விமானங்களில் சிறப்பு பாதுகாப்பு சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம், விமான பயணிகளுக்காக விமான நிறுவனங்கள் எடுத்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தெரிய வரும்.


ஏர் இந்தியா (Air India) மற்றும் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) நிறுவனங்களுக்குப் பிறகு, DGCA இப்போது இண்டிகோ மற்றும் விஸ்தாராவில் சிறப்பு பாதுகாப்பு சோதனை ஒன்றைத் தொடக்கியுள்ளது. சமீபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த சோதனைகள் செய்யப்படுகின்றன. இது DGCA –வின் உள்நாட்டு விமான நிறுவனங்களின் பாதுகாப்பு அமைப்பின் மறுஆய்வு சோதனைகளின் ஒரு பகுதியாகும்.


ALSO READ: Indian Railway: தட்கல் டிக்கெட்டுகளை எத்தனை நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்?


DGCA-வின் படி, இரு விமான நிறுவனங்களின் சிறப்பு பாதுகாப்பு சோதனை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. அது அந்த நிறுவனங்களின் அனைத்து தளங்களிலும் நடக்கும். DGCA இதற்கு முன்னர் தனியார் துறையில் ஸ்பைஸ்ஜெட் மற்றும் பொதுத்துறையில் ஏர் இந்தியாவில் இது போன்ற பாதுகாப்பு சோதனையை நடத்தியது.


விஸ்தாராவின் (Vistara) செய்தித் தொடர்பாளர் இதை உறுதிப்படுத்தினார். எனினும் இண்டிகோவின் (Indigo) தலைமை இயக்க அதிகாரியும் கார்ப்பரேட் தகவல் தொடர்புத் தலைவரும் இது தொடர்பான பி.டி.ஐ கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.


ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவின் கோழிக்கோட்டில் (Kozhikode) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் 18 பேர் இறந்தனர் என்பது நினைவிருக்கலாம். வழுக்கும் ஓடுபாதை, வலுவான காற்று, மோசமான வானிலை மற்றும் வழக்கமான இடத்திற்கு முன்பாகவே விமானம் இறங்கியது ஆகியவை இதற்குக் காரணமாக கருதப்பட்டன. 


ALSO READ: IRCTC tour package: மலிவான விலையில் தென்னிந்தியா சுற்றுப்பயணத்துடன் திருப்பதி தரிசியுங்கள்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR