கடத்தல் மிரட்டுலுக்கு பின் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு...
ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த தொலைபேசி மிரட்டலின் எதிரொலியாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த தொலைபேசி மிரட்டலின் எதிரொலியாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை, பாகிஸ்தான் நாட்டுக்கு கடத்தப் போவதாக மர்ப நபர்களிடன் இருந்து மிரட்டல் அழைப்பு வந்ததை அடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமானங்களுக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை அவசரகால சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
விமான நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் விமானச்சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த குறிப்புகள் பகிரப்பட்டுள்ளது.
குறிப்பாக, அனைத்து விமான நிலையங்களின் உள்பகுதி, விமான நிலையங்களை சுற்றியுள்ள இதர வளாகப்பகுதி, விமானங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து உரிய பரிசோதனைக்கு பின்னர் அனுப்ப வேண்டும். விமான நிலையங்களுக்கு வரும் வாகனங்களை தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் உள்ளே அனுமதிக்க வேண்டும்.
விமான நிலையத்தின் வெளி நுழைவு வாயில் தொடங்கி அத்தனை பகுதிகளிலும் அதிகப்படுத்தப்பட்ட சோதனைக்கு பின்னரே பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் சரக்குகளை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பன கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையங்களில் உள்ள சரக்கு முனையம், உணவு விடுதிகள், அங்காடிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வுடன் கூடிய பரிசோதனை மற்றும் பாதுகாப்பு செய்யப்பட வேண்டும், கண்காணிப்பு கேமராக்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அனைத்து பகுதிகளிலும் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விமான கடத்தல் (தடுப்பு) சட்டத்தின்படி விமான கடத்தல்காரர்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும், உயிருடன் பிடிக்கப்படும் குற்றவாளிகளுக்கு விசாரணைக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.