J&K சிறப்பு அந்தஸ்து ரத்தால் ஜம்மு மக்களில் பெரும்பாலோர் மகிழ்ச்சி: அஜித் டோவல்!
370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதில் காஷ்மீர் மக்களில் பெரும்பாலோர் மகிழ்ச்சியடைவதாக அஜித் டோவல் தெரிவித்துள்ளார்!!
370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதில் காஷ்மீர் மக்களில் பெரும்பாலோர் மகிழ்ச்சியடைவதாக அஜித் டோவல் தெரிவித்துள்ளார்!!
ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய அட்டூழிய குற்றச்சாட்டுகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மறுப்புத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக மட்டுமே இராணுவம் இப்பகுதியில் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் பொது ஒழுங்கை J&K காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் பராமரித்து வருவதாக NSA தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்; "இராணுவ அட்டூழியங்கள் குறித்து எந்த கேள்வியும் எழவில்லை... பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட இந்திய இராணுவம் உள்ளது" என்று டோவல் கூறினார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் நடவடிக்கையை காஷ்மீரி பெரும்பான்மையினர் ஆதரிக்கின்றனர்.
அதுமட்டும்மின்றி, பாகிஸ்தானில் இருந்து இடைமறிக்கப்பட்ட செய்திகளைக் குறிப்பிட்டார். "எல்லையில் 20 கி.மீ தொலைவில் பாகிஸ்தான் தகவல் தொடர்பு கோபுரங்கள் உள்ளன, அவை செய்திகளை அனுப்ப முயற்சிக்கின்றன" என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்; “நாங்கள் இடைமறிப்புகளைக் கேட்டோம்… அவர்கள் இங்கே தங்கள் ஆட்களிடம் சொன்னார்கள் 'எத்தனை ஆப்பிள் லாரிகள் நகர்கின்றன, அவற்றை நிறுத்த முடியவில்லையா? நாங்கள் உங்களுக்கு வளையல்களை அனுப்ப வேண்டுமா?” என கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
"காஷ்மீர் பெரும்பான்மையானவர்கள் 370 வது பிரிவை ரத்து செய்வதை ஆதரிப்பதாக நான் முழுமையாக நம்புகிறேன். இதனால், அவர்கள் அதிக வாய்ப்புகள், எதிர்காலம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைக் காண்கிறார்கள்" என்று டோவல் கூறினார். "ஒரு சில குற்றவாளிகள் மட்டுமே இதை எதிர்க்கின்றனர்" என அவர் தெரிவித்தார்.