லக்னோ: முலாயம் சிங்கிற்கு மேலும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில், கட்சியின் வங்கிக்கணக்கை அகிலேஷ் யாதவ் முடக்கி வைத்துள்ளார்.இதன் மூலம் முலாயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகிலேஷ் முகாமில் வகிகளுக்கு சமாஜ்வாடி கட்சி கணக்கை முடக்க உத்தரவு இட்டார். ரூ.500 கோடி கட்சி பணம் அகிலேஷ் கோரிக்கைப்படி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 


மாநில சட்டசபைக்கு தேர்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரு தரப்புக்கும் தேர்தல் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. இந்நிலையில், லக்னோவில் நடந்த கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அகிலேஷ், கட்டுப்பாட்டில் கட்சி சென்று விட்டதாக கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள், சில எம்.எல்.சி.,க்கள் மட்டுமே முலாயமிற்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனை கட்சி தலைவர்கள் சிலர் ஒப்பு கொள்வதாகவும் கூறப்படுகிறது. 


சமாஜ்வாதியின் தேசிய தலைவர் அகிலேஷ் பரிந்துரைப்படி, மாநில தலைவர் நரேஷ் உத்தம் பல மாவட்டங்களுக்கு தலைவர்களை நியமித்துள்ளதாக அக்கை்சக வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.