பஞ்சாப், உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு கடந்த திங்கட்கிழமையுடன் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. நாளை இந்த ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக தான் மீண்டும் உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு


ஆனால் உத்தர பிரதேசத்தில் இந்த முறை நிச்சயம் ஆட்சியை பிடிப்போம் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி வருகிறார். அங்கு பாஜகவுக்கும் - சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. சமாஜ்வாதிக்கு ஆதரவாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பரப்புரை மேற்கொண்டார். 



இந்நிலையில் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், வாரணாசியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்படுவதாக அகிலேஷ் யாதவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்படும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ், “பாதுகாப்பு இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எங்கெங்கோ கொண்டு செல்லப்படுகின்றன. சில இடங்களில் அவை திருடப்படுகின்றன. இதற்கு அதிகாரிகளும் துணை நிற்கின்றனர். பாஜக வெற்றி பெறாது என்பதால் இப்படி குறுக்கு வழியை தேர்வு செய்துள்ளனர். அதனால் தான் கருத்துக்கணிப்பிலும் ஏமாற்று வேலை செய்துள்ளனர். பாஜக ஆட்சியை இழந்துவிடுவோம் என பயப்படுகிறது” என்று கூறியுள்ளார். 


மேலும் படிக்க | பஞ்சாப்பில் யார் ஆட்சி? கருத்து கணிப்பில் தகவல்!


இந்த குற்றச்சாட்டை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் சமாஜ்வாதி கட்சியினர் விழிப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அவர் உத்தரவிட்டுள்ளார். யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும் . 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR