பீதியைக் கிளப்பும் கோவிட் எண்ணிக்கை: 1.45 லட்சத்திற்கும் மேலானோர் புதிதாக பாதிப்பு
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களில் நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களில் நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையோடு நாட்டில் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் மொத்தம் 1 லட்சம் 45 ஆயிரம் 384 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். 77,567 நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 794 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்தனர். முன்னதாக, ஏப்ரல் 4, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
நாட்டில் கொரோனா தொற்றின் நிலை
சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. கொரோனா நோய்த்தொற்றின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. நாட்டில் மொத்த கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 1,32,05,926 ஐ எட்டியுள்ளது. கொரோனா தொற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,90,000-க்கும் அதிகமாக உள்ளது. நாட்டில் தற்போது மொத்தம் 10,46,631 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றால் இதுவரை நாட்டில் 1,68,436 பேர் இறந்துள்ளனர்.
ALSO READ: Lockdown தேவையில்லை, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்- பிரதமர் மோடி
நாட்டில் கொரோனா தடுப்பூசி செயல்முறையின் நிலை
ஏப்ரல் 9 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 9,80,75,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி (Vaccine) போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 34,15,055 தடுப்பூசிகள் போடப்பட்டன. சில நாட்களாக மகாராஷ்டிராவில் 55,000 க்கும் மேற்பட்டொருக்கு தொற்று பரவி வருகின்றது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 8,521 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இறப்பு விகிதம் 1.27 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 91 சதவீதமாகவும் உள்ளது.
ALSO READ: நாடு முழுவதும் "NO MASK NO SERVICE" திட்டம் விரைவில் அமல் செய்யப்படும்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR