நாடு முழுவதும் "NO MASK NO SERVICE" திட்டம் விரைவில் அமல் செய்யப்படும்!

புதிய முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளது. அதன் வரிசையில், "முகமூடி இல்லை - சேவை இல்லை" (No mask - No service) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 8, 2021, 05:26 PM IST
நாடு முழுவதும் "NO MASK NO SERVICE" திட்டம் விரைவில் அமல் செய்யப்படும்! title=

புது டெல்லி: நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஒரு புதிய முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே சில இடங்களில் இந்த பிரச்சாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும் என அரசாங்கம் நினைக்கிறது. அதன் வரிசையில், "முகமூடி இல்லை - சேவை இல்லை" (No mask - No service) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது. 

இந்தபிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்களை முகமூடி அணிய ஊக்குவிக்கும் வேண்டும் என்பது தான். ஒருபக்கம் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில், இன்னும் பலர் முகமூடி அணியாமல் வெளியே செல்வது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. முககவசம் அணியவில்லை என்றால், கடுமையான அபராதமும் விதிக்கப்படுகிறது.

ALSO READ | COVID-19: இனி MASK வேண்டாம் என தெரிவித்த முதல் மாநிலம் இதுதான்!

தமிழ்நாட்டில் தினத்தோறும் கொரோனா அதிகரித்து வருவதால், புதியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கொரோனா பரவலை வரும் 10-ம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி அழிக்கப்பட்டு உள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலோ கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. 

இந்நிலையில், கொரோனா தொற்று அதிக அளவில் பரவாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக "No mask, No service" திட்டத்தை மீண்டும் தீவிரமாக அமல்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதாவது பெட்ரோல் பங்குகள், மால்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், பஸ், மெட்ரோ மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணியாமல் வந்தால், அவர்களுக்கு எந்த சேவையும் வழங்கப்படாது. எனவே வெளியே செல்லும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ALSO READ | இனி தமிழகத்தில் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்: TN Govt

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News