புதுடெல்லி: இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் 4,205 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் இறந்ததாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது இதுவரை பதிவான மிக அதிக ஒற்றை நாள் இறப்பு எண்ணிக்கை என்பது அச்சத்தை கிளப்பும் ஒரு விஷயமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேர்மறை விகிதத்தின் போக்கு குறைந்து வரும் அதே வேளையில், இறப்பு விகிதம் (Death Rate) பீதியைக் கிளப்பும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்த அதீத தொற்று எண்ணிக்கை மற்றும் வீரியத்தை சமாளிக்கும் அளவுக்கு நமது நாட்டின் சுகாதார அமைப்பில் போதுமான ஆயத்தங்கள் இல்லாமல் இருந்ததே இதற்கு காரணம் என கருதப்படுகின்றது. 


கடந்த 24 மணி நேரத்தில் 4205 இறப்புகளுடன், இந்தியாவின் மொத்த இறப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி 2,54,197 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.


மே 8 ஆம் தேதி இந்தியா தனது முந்தைய அதிகபட்ச ஒற்றை நாள் இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்தது. மே 8 ஆம் தேதி தரவு வெளியிடப்படப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பு இந்தியாவில் 4,187 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்தனர்.


ALSO READ: COVID Alert: டெல்லியில் 18-44 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி காலியானது: டெல்லி எம்.எல்.ஏ


மே 7 ஆம் தேதி 4,14,188 என்ற எண்ணிக்கையுடன் மிக அதிக ஒற்றை நாள் தொற்றின் அளவை நாடு பதிவு செய்தது. 


கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 2,33,40,938 ஆக உயர்ந்துள்ளது. 


நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ மையங்களில் நேற்று 3,55,338 பேர் குணமடைந்து வெளியேறினர். 


நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவமனை மீட்பு எண்ணிக்கை 1,93,82,642 ஆக உள்ளது.


இந்தியாவில் தற்போது 37,04,099 பேர் சிகிச்சையில் உள்ளனர். 17,52,35,991 பேர் தங்களது முதல் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகளை (Vaccine) செலுத்திக்கொண்டுள்ளனர். 


இந்தியாவில் கொரோனா தொற்றின் (Coronavirus) அதி தீவிர இரண்டாவது அலையை ஏற்படுத்தி, பேரழிவுக்கு காரணமாக விளங்கும் சக்திவாய்ந்த இந்த வைரஸ் மாறுபாடு இதுவரை 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் அக்டோபர் 2020 இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் -19 வைரஸின் B.1.617 மாறுபாடு, 44 நாடுகளிலிருந்து, GISAID திறந்த-அணுகல் தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட்ட மரபணு காட்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐ.நா. சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர வேறு ஐந்து நாடுகளிலிருந்தும் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளன என்றும் WHO மேலும் தெரிவித்துள்ளது. 


இந்த வார தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பு  ‘B.1.617’ மாறுபாட்டை, ‘கவலை அளிக்கக்கூடிய வைரஸ் மாறுபாடு’ என்று அறிவித்தது.


ALSO READ: திருப்பதியில் ஆக்சிஜன் கிடைக்காமல் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR