பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.12-க்கு மேல் அதிகரிக்கலாம்? அறிக்கை என்ன சொல்கிறது!
Crude Oil Price Hike: இந்திய எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் எரிபொருள் விலையை லிட்டருக்கு 12.1 உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை: நாட்டில் பணவீக்கத்தால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதன் விலை இன்னும் அதிகமாக தான் உள்ளது. ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு, எரிபொருள் விலை மீண்டும் உயரும் என நம்பப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை மார்ச் 16ம் தேதிக்குள் லிட்டருக்கு ரூ.12க்கு மேல் உயர்த்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.12க்கு மேல் உயர வாய்ப்பு:
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ஒரு அறிக்கையில், கடந்த இரண்டு மாதங்களில் சர்வதேச எண்ணெய் விலையில் அதிகரிப்பு காரணமாக, அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே சில்லறை விற்பனையாளர்கள் மார்ச் 16, 2022 அன்று அல்லது அதற்கு முன்னதாகவே, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் எரிபொருள் விலையை லிட்டருக்கு 12.1 உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை கணக்கீடு செய்தால், லிட்டருக்கு ரூ.15.1 அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தியாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: பெட்ரோல் பங்கில் மோசடி: பெட்ரோலில் தண்ணீர் கலப்படம், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
கச்சா எண்ணெய் பீப்பாய் விலை எவ்வளவு?
பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் உள்ள பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) படி, மார்ச் 3 அன்று இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $117.39 ஆக உயர்ந்துள்ளது. இந்த எரிபொருள் விலையானது 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் அதிக விலையாகும். கடந்த ஆண்டு நவம்பர் தொடக்கத்தில், சராசரி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $81.5 ஆக இருந்தது.
உத்தரபிரதேசம் சட்டசபை தேர்தல்:
உத்தரபிரதேசத்தில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதியும், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதியும் நடைபெறும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வளவு உயரும்:
ஏஜென்சிகள் அறிக்கையின்படி, "மார்ச் 3, 2022 நிலவரப்படி, வாகன எரிபொருட்களின் நிகர சந்தை மதிப்பு லிட்டருக்கு மைனஸ் ரூ.4.92 ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இதுவரை லிட்டருக்கு ரூ.1.61 ஆக உள்ளது. இருப்பினும், எரிபொருளின் தற்போதைய சர்வதேச விலையில், மார்ச் 16 அன்று நிகர மார்ஜின் மைனஸ் லிட்டருக்கு ரூ.10.1 ஆகவும், ஏப்ரல் 1-ஆம் தேதி பூஜ்ஜியத்திற்குக் கீழே லிட்டருக்கு ரூ.12.6 ஆகவும் இருக்கும் என ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன
மேலும் படிக்க: வரும் நாட்களில் PUC சான்றிதழ் இல்லை என்றால் பெட்ரோல் கிடையாது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR