சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் 2018 - வெற்றி பெறப்போவது யார்!
90 சட்மன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது!
90 சட்மன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது!
சத்தீஸ்கர் மாநிலம் உள்பட, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பினை தலைமை தேர்தல் ஆணையம் OP ராவத், கடந்த அக்டோபர் 6-ஆம் நாள் அறிவித்தார். இந்த அறிவிப்பின் படி., 90 சட்மன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில்
முதற்கட்ட வாக்குப்பதிவு - நவம்பர் 12, 2018
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - நவம்பர் 20, 2018
வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018, நடைபெறுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக நாளை 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மும்முராமக நடைப்பெற்று வருகிறது.
நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் அதிகம் நிலவும் இந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதே அறிதான காரியம். இந்நிலையில் நாளை சத்தீஸ்கரின் தெற்கு பகுதியில் தேர்தல் நடைப்பெறுவதால் வாக்குப்பதிவு பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் சத்தீஸ்கரில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரையில் மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் ஜனதா காங்கிரஸ் தலைமையிலான JCC கூட்டணி (ஜனதா காங்கிரஸ் - 55, பகுஜன் சமாஜ் கட்சி - 33, இந்திய பொதுவுடமைக் கட்சி -2) ஆகிய கூட்டணி தேர்தலை எதிர்கொள்கிறது.
கடந்த 2003-ஆம் ஆண்டு துவங்கி சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைப்பெற்று வருகிறது. பாஜக-வின் ராமன் சிங் கடந்த 14 ஆண்டுகளாக சத்தீஸ்கரின் முதல்வராக பதவி வகித்து வருகின்றார். சத்தீஸ்கரில் நீண்ட நாட்கள் முதல்வராக பதவி வகித்தது இவரே... எனினும் இந்த தேர்தலில் இவர் வெற்றி பெருவாரா என்பது கேள்விகுறியாகவே உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
காரணம் முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அட்டல் பிகாரி வாஜ்பாயி அவர்களின் மருமகள் கருணா சுக்லாவின் விலகல், வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். பாஜக-வின் மாநில கட்சி ஆலோசகராக இருந்த இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு பாஜக-வில் இருந்து விலகி 2014-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் வெற்றிகண்டு வரும் ராஜ்ந்தோகன் தொகுதியில் வாஜ்பாயி அவர்களின் பெயராலே அவர் வெற்றி பெற்று வந்தார் என்னும் சொல் உள்ளது. இந்நிலையில் தற்போது வாஜ்பாயி அவர்களின் மருமகளின் விலகல், பாஜக வெற்றியினை பாதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.