ஒவ்வொரு இந்தியரும் காவலாளிகளாக மாற வேண்டும் என விரும்புகின்றார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார். இதற்கு பதிலடியாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.


மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் இல்லை. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன் தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் பிரதமர் மோடி 'சௌகிதார்' என மாற்றியுள்ளார். 


இந்நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும், வாட்ச்மேன்களாக பணியாற்றும் சுமார் 25 லட்சம் காவலாளிகளிடம் ஆடியோ வசதி மூலம் இன்று உரையாற்றினார்.  ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: காவலாளிகள் என்பதற்கான விளக்கத்தை உலகம் முழுவதும் உள்ள பல மொழிகளில் அர்த்தம் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் காவலாளிகளாக மாற வேண்டும் என விரும்புகின்றார். 


ஆனால், தவறான நோக்கத்துடன், காவலாளி என்பது குறித்து சிலர் தவறாக பிரசாரம் செய்கின்றனர். அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவர்களின் வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியது எதிர்பாராதது. காவலாளிகள் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளனர். நாட்டில் உள்ள அமைத்து மொழியினரும் தற்போது 'சௌகிதார்' என்ற வாத்தையை புரிந்து கொள்கின்றனர். அனைத்துக் கொடுமைகளுக்கு எதிராகவும் இந்தியா போராடி வருகிறது. நமது ராணுவம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும் என  அவர் தெரிவித்துள்ளார்.