டெல்லி: இந்தியன் ரயில்வே (India Railway) வெளியிட்ட அண்மை அறிவிப்பின்படி, நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.  எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் என அனைத்துவிதமான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. எனவே, ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி வரையிலான அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன. முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் அனைத்திற்குமான கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் எனவும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கால அட்டவணைப்படி இயங்கும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.  மார்ச் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக நாட்டில் லாக்டவுன் (Lockdown) அறிவிக்கப்பட்டது.  இந்த பொது முடக்கத்தின் கீழ் பொது போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டபோது, ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. 


READ | ரயில்வே துறை பணிக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மோசமான செய்தி...


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னதாக நாடு முழுவதும் தோராயமாக 13,100 ரயில்கள் இயக்கப்பட்டன.   முதல் கட்டமாக ஜும் மாதம் 30ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில் சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது ரயில்வேயின் இந்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு பின்னடைவாக இருக்கும்.  ஆனால், கொரோனா பரவலை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அனைவராலும் புரிந்துக் கொள்ளக்கூடியது தான்.