மணிப்பூர் பிராந்திய எல்லை பாதிக்கப்படாது -அமித் ஷா உறுதி!
நாகா தீர்வு குறித்த அச்சங்களை நீக்கி, மணிப்பூர் முதல்வர் என்.பிரென் சிங் செவ்வாய்க்கிழமை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகா சமாதான ஒப்பந்தத்தில் இறுதி தீர்வு காணும் போது மாநிலத்தின் ஒருமைப்பாடு சமரசம் செய்யப்பட மாட்டாது என்று உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடன் மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவிக்கையில்., "மணிப்பூரின் பிராந்திய எல்லை பாதிக்கப்படாது, மாநிலத்தின் நிர்வாக அமைப்பு பாதுகாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரைன் சிங் நவம்பர் 10-ஆம் தேதி புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது நாகர்களுடன் இறுதி ஒப்பந்தம் செய்வதற்கு முன்னர் அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிப்பதாக ஷா உறுதியளித்துள்ளார் என்றும் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு மத்திய அரசு விரைவில் மணிப்பூரில் உள்ள பங்குதாரர்களை ஆலோசனைக்கு அழைக்கும் என்றும் அவர் குறுப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம், அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களும் நாகா குழுக்களுடன் எந்தவொரு தீர்வும் வருவதற்கு முன்பு ஆலோசிக்கப்படுவார்கள் என்றும், இறுதி நாகா தீர்வு எட்டப்பட்டதாக வதந்திகளுக்கு நம்பகத்தன்மை வழங்கப்படக்கூடாது என்றும் உள்துறை அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.