ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு வருகிற மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது என தகவல் தரப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் இமாலய பகுதியில் அமர்நாத் என்ற பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். 


ஜூலை மாதத்தில் உருவாகும் இந்த பனிலிங்கம் சுமார் 2 மாதம் வரை இருக்கும். 


இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். யாத்திரை காலத்தில் ஒவ்வொரு நாளும் பாதை ஒன்றுக்கு சுமார் 7500 பக்தர்கள் இந்த பனி லிங்கத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான யாத்திரை வருகிற ஜூன் 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடைபெறும் எனவும், அதற்கான முன்பதிவு வருகிற மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.