ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் சமீப காலமாக மக்களை அடித்து துன்புறுத்த பயன்படுத்தபடுகிறது என அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இந்திய பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்ற தத்துவயியலாளரான அமர்த்தியா சென், ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் சமீப காலமாக மக்களை அடித்து துண்புறுத்த பயன்படுத்தபடுகிறது என தெரிவித்துள்ளார்.


மக்களின் முன் தன் கருத்துகளை பதிவு செய்த அவர்., "இதற்கு முன் இங்கு ஜெய் ஸ்ரீராம் என கூறி நான் கேட்டதில்லை.  இது மக்களை அடித்து, தாக்குவதற்கு சமீப காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


வங்காள கலாசாரத்துடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என நான் நினைக்கிறேன்.  சமீப நாட்களில் இங்கு ராம நவமி அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையும் நான் இதற்கு முன் கேட்டறியவில்லை" என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் "எனது 4 வயது பேத்தியிடம், உனக்கு பிடித்த கடவுள் எது? என்று கேட்டேன்.  அதற்கு அவள் அன்னை துர்க்கை என கூறினாள்.  அன்னை துர்க்கையின் முக்கியத்துவம் ஆனது ராம நவமியுடன் ஒப்பிட முடியாதது”  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பிட்ட சில மதத்தை சேர்ந்தவர்கள் வெளியில் நடமாடவே பயப்படுகின்றனர் எனத் தெரிவித்தார். இந்த கருத்துக்கு பதில் அளித்த மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், “அமர்த்தியா சென்னுக்கு அநேகமாக வங்காளத்தை  அறிந்திருக்க மாட்டார். அவருக்கு பெங்காலி அல்லது இந்திய கலாசாரம் பற்றி தெரியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.