பிரபல பாலிவுட் நடிகையான கத்ரினாவிற்கும், பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலும் நீண்டநாள் காதலித்து கொண்டிருந்ததையடுத்து, இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  அதன்படி இவர்களது திருமணம் பஞ்சாபி முறைப்படி ராஜஸ்தான் மாநிலம் மாதோப்பூர் மாவட்டத்தின் பர்வாராவில் அமைந்துள்ள சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் நேற்று(9/12/2021) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | 2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்!


கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் இவர்கள் இருவரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும், சில திரைப் பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.  இவர்களது திருமணத்திற்கு வருபவர்களுக்கு அங்கு நடக்கும் நிகழ்வுகளை செல் போனிலோ அல்லது கேமராவிலோ புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.


 



ஆடம்பரமாக நடந்த அந்தக் திருமணத்தில் கத்ரினாவிற்கு மெஹந்தி மட்டுமே ஒரு லட்சம் என்று கூறப்படுகிறது.  சொஜட்(sojat) எனப்படும் பிரத்யேகமான மெஹந்தி அவருக்காக வரவழைக்கப்பட்டது.  மேலும் அவர் அணிந்திருந்த லெஹங்காவும் பலவித வேலைபாடுகளுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.  விக்கி கோஷல் கோட்டையில் ராஜாவின் அறையிலும், கத்ரினா ராணியின் அறையிலும் தங்கினர் என்று கூறப்படுகிறது.  மேலும் இவரது திருமணத்தில் ரூ.4 லட்ச மதிப்பில் இத்தாலியை சேர்ந்த சமையல் வல்லுநர் ஒருவர் செய்யப்பட்ட கேக்கும் வெட்டப்பட்டது.  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பாலிவுட்டிலிருந்து தயாரிப்பாளர் கரண் ஜோஹர், இயக்குனர் பர்ஹா கான், நடிகர் அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதனையடுத்து அமேசான் ப்ரைம் OTT தளத்திடம் இவர்களின் திருமண விழாவை ஒளிபரப்பும் உரிமம் ரூ.80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் அடுத்த மாத தொடக்கத்தில் இவர்களின் திருமண விழா நிகழ்ச்சி OTT தளத்தில் ஒளிபரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  ஏற்கனவே பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பபட்டது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | அண்ண யாரு தளபதி! ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஜய்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR