ரிலையன்ஸ் ஜியோ நாட்டில் பல ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை மற்ற தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு  வழங்குகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் பணக்காரர் முகேஷ் அம்பானியின் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, Jio தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு குறைந்த விலையில் பல மலிவான 4G டேட்டா வவுச்சர்களையும் கொண்டுள்ளது.


நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ஜியோ புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதோடு, தற்போதுள்ள திட்டங்களையும் புதுப்பித்துள்ளது. ஜியோ சமீபத்தில் தனது ரூ.11-க்கு 4G டேட்டா வவுச்சருடன் கிடைக்கும் நன்மைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மலிவான Jio Data Voucher-ல், முன்பை விட இப்போது அதிகமான தரவு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதையும், இந்த திட்டம் ஜியோவின் அதிகாரப்பூர்வ தளமான ஜியோ.காமில் புதிய நன்மைகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா (Vodafone-Idea) வழங்கும் திட்டங்களை விட ரிலையன்ஸ் ஜியோ திட்டங்கள் 33 சதவீதம் மலிவானவை. கூடுதலாக,ஜியோ இணைய சேவையுடன் அனைத்து பேக்குகளுடனும் டஜன் கணக்கான நன்மைகளை பாக்கெட் இணக்கமான விலையில் வழங்கி வருகிறார்.


ALSO READ | அடுத்த சில நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை UPI செயலிகள் இயங்காது!!


அத்துடன் ஜியோ வழங்கும் பிரபலமான திட்டங்கள், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜியோபோன், ISD, சர்வதேச ரோமிங், இன்-ஃப்ளைட்ஸ் ரோமிங், டாப்-அப்கள் மற்றும் பல சேவைகளை வழங்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், நிறுவனம் அனைத்து திட்டங்களுடனும் டேட்டா சேவையையும் வழங்குகிறது மற்றும் 


இருப்பினும், டேட்டா நன்மைகள் ரூ.11 முதல் ஆரம்பமாகிறது, இது தற்போது இருக்கும் திட்டம் நீடிக்கும் வரை 1GB டேட்டாவை வழங்கும். இந்த திட்டம் JIO பயன்பாட்டில் டெலிகாம் பிரிவில் 4G டேட்டா வவுச்சர்கள் என்ற பிரிவில் கிடைக்கிறது. மேலும் இது ரூ. 21, ரூ. 51, மற்றும் ரூ.101 விலைகளிலும் டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது.


ரிலையன்ஸ் ஜியோ 4G டேட்டா வவுச்சர் விவரங்கள்


ரூ.11 விலையிலான முதல் டேட்டா வவுச்சர் 1 GB டேட்டாவை வழங்குகிறது, அதே நேரத்தில் ரூ.21 வவுச்சர் 2 GB டேட்டாவை வழங்குகிறது, ரூ.51 திட்டம் 6 GB டேட்டாவை வழங்குகிறது, மற்றும் ரூ.101 திட்டம் 12 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டங்களை மற்ற நிறுவன திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏர்டெல் மற்றும் Vi டேட்டாத் திட்டங்களை விட ரிலையன்ஸ் ஜியோ 4G டேட்டா வவுச்சர்கள் மிகவும் மலிவானதாக தெரிகிறது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR