ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த இந்திய புகைப்பட பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திகி, இரு வாரத்திற்கு முன் ஆப்கானிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டார். டெல்லியில் வசிக்கும் டேனிஷ் சித்திகி, ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாவட்டத்தின்  ஸ்பின் போல்டாக் பகுதியில் நடந்த மோதல்களின் போது கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.  செய்திகளை சேகரிக்க சென்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், முன்னதாக டேனிஷ் சித்திகி (Danish Siddiqui) மோதலின் போது நடந்த துப்பாக்கி சூட்டில்  இறந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது, அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. புலிட்சர் பரிசு பெற்ற இந்திய புகைப்பட பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திகியின் அடையாளத்தை உறுதி செய்த பின், தாலிபான்கள் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர் என வாஷிங்டன் எக்ஸாமினர்  (Washington Examiner ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


சித்திகி குழுவினரை நோக்கி முதலில் தாலிபான்கள் தாக்கிய போது, அவருக்கு காயம் ஏற்பட்டு மசூதி ஒன்றில் முதலுதவி பெற்றுக் கொண்டிருந்தார். இது குறித்த தகவலை அறிந்த, தாலிபான்கள் அவர் மசூதியில் இருக்கு தகவலை அறிந்து, அங்கு சென்ற அவரை மீண்டு பிடித்து, அவரது அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, அவரை தலையில் தாக்கியதோடு, அவரது உடலை குண்டுகளால் துளைத்துள்ளனர். 


ALSO READ | வேற்று கிரக வாசிகள் பூமியை அப்பளம் போல் அடித்து நொறுக்கி விடுவார்கள்: UFO நிபுணர்


 


பொது வெளியில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் சித்திகியின் முகம் அடையாளம் காணக் கூடிய வகையில் இருந்தாலும், கிடைத்த வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கல் மூலம் அவரை துண்புறுத்தி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெற்றதிலிருந்து, கடுமையான வன்முறைகள் நடந்து வருகின்றன, படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட, டேனிஷ் தலிபான்கள் நடத்தும் தாக்குதல்கள் பற்றிய செய்திகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.


டேனிஷ் சித்திகி ஒரு தொலைக்காட்சி நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் ஒரு புகைப்பட பத்திரிகையாளரானார். டேனிஷ்  2018 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி ஆப்கானிஸ்தானில் படுகொலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR