காந்தஹார்: ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த இந்திய புகைப்பட பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திகி ஆப்கானிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டார். டெல்லியில் வசிக்கும் டேனிஷ் சித்திகி, ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமையில் செய்திகளை சேகரிக்க சென்றார். இருப்பினும், டேனிஷ் எவ்வாறு கொல்லப்பட்டார், யாரால் கொல்லப்பட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
காந்தஹார் மாகாணத்தில் டேனிஷ் கொலை
காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் பகுதியில் இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெற்றதிலிருந்து, கடுமையான வன்முறைகள் நடந்து வருகின்றன, படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட, டேனிஷ் தலிபான்கள் நடத்தும் தாக்குதல்கள் பற்றிய செய்திகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
ALSO READ | Afghanistan: பரிதாப நிலையில் பெண்கள், போராளிகளுக்கு அடிமைகளாகும் பரிதாபம்
டேனிஷ் சித்திகி ஒரு தொலைக்காட்சி நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் ஒரு புகைப்பட பத்திரிகையாளரானார். டேனிஷ் 2018 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசு பெற்றார். ரோஹிங்கியா அகதிகள் நெரிக்கடி தொடர்பான புகைப்படங்களுக்காக, டேனிஷ் புலிட்சர் விருது பெற்றார்.
அவரது ட்வீட்டுகள் சில
The Humvee in which I was travelling with other special forces was also targeted by at least 3 RPG rounds and other weapons. I was lucky to be safe and capture the visual of one of the rockets hitting the armour plate overhead. pic.twitter.com/wipJmmtupp
— Danish Siddiqui (@dansiddiqui) July 13, 2021
முன்னதாக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை வியாழக்கிழமை தாஷ்கண்டில் சந்தித்து, போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் விலகிய பின்னர், மோசமடைந்து வரும் நிலைமை குறித்து விவாதித்தார். இதனுடன், ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இந்தியாவின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என மீண்டும் வலியுறுத்தினார்.
ALSO READ: மீண்டும் தலிபான்கள் வசமாகிறதா ஆப்கானிஸ்தான்; அரசு கூறுவது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR