வேற்று கிரக வாசிகள் பூமியை அப்பளம் போல் அடித்து நொறுக்கி விடுவார்கள்: UFO நிபுணர்

மேம்பட்ட விண்வெளி ஆயுதங்கள் வைத்திருக்கும் வேற்று கிரக வாசிகள், ஒரு  அப்பளத்தை உடைப்பதை போல பூமியை உடைக்க கூடும் என UFO நிபுணர்  எச்சரிக்கிறார்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 29, 2021, 03:38 PM IST
  • வேற்று கிரகவாசிகளின் ஆயுதங்களின் தொழில்நுட்பம், என்பது நமது நுட்பங்களை விட, மிக மிக நவீனமானது
  • ஏலியன்ஸ் வந்தால், அப்பளத்தை உட்டைப்பது போல் பூமியை உடைத்து விடுவார்கள்.
  • வேற்று கிரக வாசிகளின் படையெடுப்பின் சாத்தியத்தை அதிகரிக்கிறது.
வேற்று கிரக வாசிகள் பூமியை அப்பளம் போல் அடித்து நொறுக்கி விடுவார்கள்: UFO நிபுணர்

UFO நிபுணரானன நிக் போப் என்பவர் வேற்று கிரக வாசிகள் குறித்து கூறுகையில், இந்த பிரபஞ்சம் சுமார் 14 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. மனிதகுலத்தைத் தவிர வேறு பல நாகரிகங்களும் இருக்கலாம்.  அவை நம்மை விட பழையவை. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை நாம் முன்னேறிய விதத்தை பார்க்கும் போது, அவை நம்மைவிட எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்கிறார்

அமெரிக்க ஸ்பூக்ஸ் (US spooks) வழங்கியுள்ள அறிக்கை

நிக் போப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கான ஏலியன்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்காக யுஎஃப்ஒக்களை ஆராயும்  பணியை அவர் மேற்கொண்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் யுஎஃப்ஒக்கள் குறித்து அமெரிக்க ஸ்பூக்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் 2004 முதல், அமெரிக்க இராணுவ விமானிகள் அடையாளம் தெரியாத பொருட்களை வான் பரப்பில் 143 முறை பார்த்ததாகக் கூறியுள்ளனர். இது வேற்று கிரக வாசிகளின் படையெடுப்பின் சாத்தியத்தை அதிகரிக்கிறது மேலும், இது அமெரிக்க இராணுவத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என கூறியுள்ளது. 

ALSO READ | இன்னும் 30 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளாக ஆவார்கள்: விஞ்ஞானிகள்

வேற்று கிரக வாசிகளின் ஆயுத தொழில்நுட்பம்

'தி சன்' அறிக்கையின்படி, நிக் போப், வேற்று கிரகவாசிகளின் ஆயுதங்களின் தொழில்நுட்பம், என்பது நமது நுட்பங்களை விட, மிக மிக நவீனமானது. அவர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளாக அதை  உருவாக்கி வருவதால், அதன் அருகில் கூட செல்ல முடியாத அளவிற்கு அதி நவீனமானது.

மனிதர்களால் போரட முடியுமா

யுஎஃப்ஒ நிபுணர் நிக் போப் இது பற்றி கூறுகையில், வேற்று கிரகங்களிலிருந்து வரும் உயிரினங்கள் நம்மைத் தாக்கினால், மனிதர்கள் அவர்களுடன் போட்டியிடுவது சாத்தியமில்லை என கூறுகிறார்.

'ஏலியன்ஸ் வந்தால், அப்பளத்தை உட்டைப்பது போல் பூமியை உடைத்து விடுவார்கள்'

யுஎஃப்ஒ நிபுணர் (UFO Expert) நிக் போப், மற்ற கிரகங்களிலிருந்து வெளிநாட்டினர் பூமியை ஆக்கிரமிக்க வந்திருந்தால், மனிதர்கள் அவர்களிடமிருந்து தப்பிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். வேற்றுகிரகவாசிகள், பூமியை ஒரு அப்பளம் போல் உடைத்து விடுவர்கள் என அவர் எச்சரிக்கிறார். 

ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News