டோக்லாம் அருகே கிராம மக்கள் வெளியேற ராணுவம் உத்தரவு
பூடான் எல்லை டோக்லாம் பகுதியை ஒட்டி வசிக்கும் இந்திய கிராம மக்களை வெளியேறும்படி இந்திய ராணுவத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோக்லாம் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இது குறித்து இரு நாடுகள் இடையிலான பிரச்னை தொடங்கி 50 நாள்கள் ஆன நிலையில், இந்தியாவுக்கு சீன ஊடகங்கம் எச்சரிக்கை விடுத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எந்நேரமும் போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் டோக்லாம் எல்லையை ஒட்டியுள்ள நதாங் கிராமத்தில் வசிக்கும் இந்திய மக்களை உடனடியாக வெளியேறும்படி ரானுவத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவர்கள் வெளியேறினால் அந்த இடத்தை மையமாகக் கொண்டு, இந்திய ராணுவத்தினர் முகாம் ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.