தேர்தல் பத்திரங்கள் குறித்து ராகுல் காந்தியின் விமர்சனத்தால் கோபமடைந்த அமித் ஷா.. பதிலடி
Amit Shah Angry On Rahul Gandhi: தேர்தல் பத்திரங்கள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாங்கள் ரூ.6,200 கோடி பெற்றுள்ளோம், அதேசமயம் இந்தியா அலையன்ஸ் ரூ.6,200 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. காங்கிரசுக்கு ரூ.1,600 கோடி பணம் எப்படி வந்தது? எனக் அடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
Electoral Bond: தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜகவை காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் தொடர்ந்து தாக்கி வருகிறது. தேர்தல் பத்திரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த 'தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை' என்ற தீர்ப்பு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் மற்றும் அவற்றைப் பெற்றுக்கொண்ட கட்சிகளின் விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டதை அடுத்து, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதன்மூலம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களைப் பெற்றிருப்பது பா.ஜ.க என்ற உண்மை வெளியானது.
காங்கிரசுக்கு ரூ.1,600 கோடி பணம் எப்படி வந்தது? அமித்ஷா கேள்வி
இதனையடுத்து தேர்தல் பத்திரங்கள் விவகாரம் குறித்து 'மிரட்டி பணம் பறிக்கும் மிகப்பெரிய கும்பலை பிரதமர் மோடி வழிநடத்தி வருகிறார்' என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகத் தாக்கி பேசியிருந்தார். அதற்கு பதில் அளித்த அமித் ஷா, தேர்தல் பத்திரங்கள் உண்மையில் மிரட்டி பணம் பறிக்கும் விவகாரம் என்றால், காங்கிரசும் ரூ.1,600 கோடி நன்கொடையாக எப்படி வந்தது? இந்தத் தொகையை எங்கிருந்து வாங்கினார்கள்? என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். அது 'மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்' மூலம் வாங்கினார்களா? அந்த 1,600 கோடி என்ன என்பதை காங்கிரஸ் கட்சி தான் சொல்ல வேண்டும் என்றார்.
மேலும் படிக்க - Electoral Bonds : அதிக நன்கொடை பெற்ற டாப் 10 கட்சிகள்.... பாஜக டூ அதிமுக வரை!
உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதிக்கிறோம் -அமித்ஷா
உச்சநீதிமன்றம் எந்த முடிவை எடுத்தாலும் அதை நாங்கள் மதிக்கிறோம் என்றும், தேர்தலில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்கவே தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
எங்களை விட இந்தியா கூட்டணி அதிக பணம் பெற்றுள்ளது - அமித்ஷா
மீடியா சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, தேர்தலில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறினார். இது ஒரு வெளிப்படையான நன்கொடையாக நாங்கள் கருதுகிறோம். உச்சநீதிமன்றம் எந்த முடிவை எடுத்தாலும் அதை நாங்கள் மதிக்கிறோம் என்றும் அவர் கூறினார். பாஜக ரூ.6,200 கோடி நன்கொடை பெற்றுள்ளதாகவும், ஆனால் இந்தியா கூட்டணி அதை விட அதிக நன்கொடைகளை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்பட்ட நன்கொடைகள் குறித்து நாங்கள் பேசினால், திமிர்பிடித்த கூட்டணியால் எந்த இடத்திலும் முகத்தை காட்ட முடியாது என அமித்ஷா கடுமையாக விமர்சித்தார். நாங்கள் ரூ.6,200 கோடி பெற்றுள்ளோம், அதேசமயம் இந்தியா அலையன்ஸ் ரூ.6,200 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. எங்களிடம் 303 இடங்கள் உள்ளதாகவும், 17 மாநிலங்களில் நாங்கள் ஆட்சியில் உள்ளதாகவும் அவர் கூறினார். ராகுல் பாபா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் உள்ளன? இதற்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ