Electoral Bonds : அதிக நன்கொடை பெற்ற டாப் 10 கட்சிகள்.... பாஜக டூ அதிமுக வரை!

Electoral Bonds: நாடு முழுவதும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடைகளை திரட்டிய டாப் 10 கட்சிகளையும், அதன் விவரங்களையும் இங்கு காணலாம்.

Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அந்த தகவல்களை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்மூலம் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.  


 

 

1 /10

1. தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக மொத்தமாக ரூ.6,986.5 கோடியை திரட்டியுள்ளது. இவற்றில் 2019-20ம் ஆண்டு மட்டும் ரூ.2,555 கோடியை பாஜக பெற்றுள்ளது.  

2 /10

2. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி பெற்றுள்ளது.  

3 /10

3. எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ரூ.1,334.35 கோடியை திரட்டியுள்ளது.  

4 /10

4. தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1,322 கோடி பெற்றுள்ளது.

5 /10

5. தேர்தல் பத்திரம் மூலம் திமுக ரூ.656.5 கோடியை பெற்றுள்ளது.  

6 /10

6. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.442.8 கோடி பெற்றுள்ளது.

7 /10

7. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ரூ.181.35 கோடி பெற்றுள்ளது.

8 /10

8. தேர்தல் பத்திரம் மூலம் சமாஜ்வாடி கட்சி ரூ.14.05 கோடி பெற்றுள்ளது.

9 /10

9. தேர்தல் பத்திரம் மூலம் அகாலிதளம் ரூ.7.26 கோடி பெற்றுள்ளது.

10 /10

10. தமிழ்நாட்டின் அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6.05 கோடி பெற்றுள்ளது.