Hindi Diwas: உள்ளூர் மொழிகளுடன் சேர்ந்து `இந்தி` பயன்படுத்துமாறு அமித் ஷா வேண்டுகோள்!!
வடநாட்டு மக்களால் இன்று `இந்தி தினம்` கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உள்ளூர் மொழிகளுடன் சேர்ந்து முடிந்தவரை `இந்தி` பயன்படுத்துமாறு அமித் ஷா (Amit Shah) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புது டெல்லி: இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை அதன் பலம் மற்றும் ஒற்றுமையின் சின்னம் என்றும் புதிய கல்வி கொள்கை "இந்தி" மற்றும் பிற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) தெரிவித்துள்ளார்.
வடநாட்டு மக்களால் இன்று "இந்தி தினம்" (Hindi Diwas) கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், தொடர்ச்சியான ட்வீட் மற்றும் வீடியோ செய்தியில், திரு அமித் ஷா, "இந்தி மொழி" இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத பகுதி என்றும், இது சுதந்திர போராட்டத்திலிருந்து தேசிய ஒற்றுமை மற்றும் அடையாளத்தின் பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த ஊடகமாக உள்ளது என்றும் கூறினார்.
ALSO READ |
தமிழக மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு - மீண்டும் சர்ச்சை!!
இந்தி கற்றால் நன்றாக இருக்குமென்று தான் கூறினேன் -அமித் ஷா!
"ஒரு நாட்டின் மிகப்பெரிய அடையாளம் அதன் மொழி. இந்தியாவின் பல்வேறு மொழிகள் மற்றும் கிளைமொழிகள் அதன் வலிமையும் ஒற்றுமையின் அடையாளமும் ஆகும். கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை நிறைந்த இந்தியாவில், "இந்தி" பல நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த தேசத்தையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக இருந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உள்ளூர் மொழிகளுடன் சேர்ந்து முடிந்தவரை "இந்தி" (Hindi Languages) பயன்படுத்துமாறு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR