இந்தி கற்றால் நன்றாக இருக்குமென்று தான் கூறினேன் -அமித் ஷா!

வேறு ஒரு மொழி கற்க வேண்டும் எனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் தான் கூறியதாக, தனது சர்ச்சை கருத்துக்கு விளக்கமளித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Last Updated : Sep 18, 2019, 06:57 PM IST
இந்தி கற்றால் நன்றாக இருக்குமென்று தான் கூறினேன் -அமித் ஷா! title=

வேறு ஒரு மொழி கற்க வேண்டும் எனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் தான் கூறியதாக, தனது சர்ச்சை கருத்துக்கு விளக்கமளித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

இந்தி ஒரு "ஒன்றிணைக்கும் மொழி" என்று தான் கூறிய கருத்துக்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிராந்திய மொழிகளில் இந்தி விதிக்குமாறு ஒருபோதும் கேட்கவில்லை என்றும், "சிலர் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களுடை தேர்வு" என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தி அனைத்து இந்தியர்களுக்கும் ஒன்றிணைக்கும் மொழியாக மாறுவது குறித்து இந்த வார தொடக்கத்தில் அமித் ஷா கூறிய கருத்து, இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலங்களுக்கு இந்தியை திணிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் முன்னோட்டமாக பலதரப்பில் இருந்து விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தனது சர்ச்சைகுறிய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள அமித் ஷா தெரிவிக்கையில்.,  "நான் ஒருபோதும் மற்ற பிராந்திய மொழிகளில் இந்தி திணிக்கக் கேட்கவில்லை, ஒருவரின் தாய்மொழிக்குப் பிறகு இந்தி இரண்டாவது மொழியாகக் கற்க மட்டுமே நான் கோரியிருந்தேன். நானே இந்தி அல்லாத குஜராத் மாநிலத்திலிருந்து வந்தவன். எனது கருத்தை கொண்டு சிலர் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த சனியன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்த ட்விட்டில்., "இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உள்ளது, ஆனால் உலகளவில் இந்தியாவின் அடையாளத்தின் அடையாளமாக மாறும் ஒரு பொதுவான மொழி இருக்க வேண்டியது அவசியம் ... இன்று, ஒற்றுமையுடன் தேசத்தை ஒன்றிணைக்கும் திறன் கொண்ட ஒரு மொழி என எதுவும் இல்லை, எனினும் இந்தியாவில் மிகவும் பரவலாக பேசப்படும் மற்றும் புரிந்துகொள்ளப்பட்ட மொழியாக உள்ள இந்தி மொழியால் இது சாத்தியப்படும்" என குறிப்பிட்டு இருந்தார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அமித் ஷா-வின் இந்த ட்விட்டர் பதிவு, மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித் ஷாவின் தற்போதைய விளக்கம் போராட்டங்களை சற்று தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News