புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் இரண்டு நாள் பயணத்திலிருந்து திரும்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் மாநிலத்தின் நிலைமை குறித்து தெளிவாக இன்று (வெள்ளிக்கிழமை) விளக்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவையில் பேசிய அமித்ஷா, "ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் பரவுவது பாகிஸ்தானால் தான் என்று அவர் கூறினார். பாஜக அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் பின்வாங்க போவது இல்லை. பயங்கரவாதத்தை வேரோடு அளிப்பது தான் எங்கள் அரசின் குறிக்கோள் ஆகும். பயங்கரவாதத்தின் வேர் எங்கிருந்தாலும், நாங்கள் அங்கு சென்று அவர்களை வேர் அறுப்போம் என்று அவர் தெளிவாகக் கூறினார். 


மத்திய அரசு ஜே.கே.எல்.எஃப். மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புக்களை தடை செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் அவர்களை தடை செய்யாமல் பாதுகாத்தது. ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை காங்கிரஸ் ஏன் தடை செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார்.


பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கை மாறிவிட்டது என்பதை உலகம் முழுவதும் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சர் கூறினார்.