ஒரு மணி நேரத்தில் 44 முறை மோடி பெயர் உச்சரிக்கும் ராகுல் காந்தி Modi-Phobia நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ஆம் நாள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று ஆளும் பாஜக சார்பில் நரசிக்பூர் தொகுதியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி Modi-Phobia என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என விமர்சித்துள்ளார்.


நாட்டு மக்களிடையே நிலவும் ஏழ்மை, பாதுகாப்பின்மை, ஒற்றுமையின்மை ஆகியவற்றை போக்க மோடி அரசு செயல்பட்டு வரும் வேலையில், பிரதமர் பதவியில் இருந்து மோடியினை அகற்ற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இதனை லட்சியமாக கொண்டுள்ள காங்கிரஸ் மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை எனவும் அமித் ஷா பொதுகூட்டத்தில் தெரிவித்தார்.


பாஜக ஆட்சியின் இந்த 4 ஆண்டு காலத்தில் இதுவரை 129 நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் 4 தலைமுறைகளை கடந்த காங்கிரஸ் தங்கள் குடும்பத்தாரின் நலனில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறது. இந்த நான்கு தலைமுறை தலைமையால் நேரு-காந்தி குடும்பத்தார் நாட்டிற்கு செய்தது என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


சமீபத்திய பிரச்சாரம் ஒன்றில் ராகுல் காந்தி தனது 22 நிமிட உறையில் 44 நான்கு முறை மோடியின் பெயரை உச்சரித்துள்ளார். அவர் பாஜக-விற்கு பிரச்சாரம் செய்கின்றாரா, இல்லை காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்கின்றாரா என தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர் உர்ரி பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்தும் மேற்கொள்காட்டினார். அப்போது அவர் தெரிவிக்கையில்., 2016-ஆம் ஆண்டு நடைபெற்று உர்ரி பயங்கரவாத தாக்குதலினால் நாடே கொந்தளித்தது, அப்போது துல்லிய தாக்குதலுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு நாட்டை காப்பாற்றினார் என குறிப்பிட்டார்.


உலக பொருளாதார மதிப்பிட்டில் இந்தியாவினை 9-வது இடத்தில் விட்டு சென்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக-வின் அதிரடி திட்டங்களால் தற்போது இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு பாஜக சாதனைகளை பட்டியலிடலாம், இதேப்போல் காங்கிரஸ் பட்டியலிட்டு காட்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மத்திய பிரதேசம் | 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில்


  • வாக்குப்பதிவு - நவம்பர் 28, 2018

  • வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018