நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்த முறை மின்னணு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும்,  இதன் மூலம் துல்லியமான தரவுகளை சேகரிக்க முடியும் என்று அவர் அஸ்ஸாமில் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த முறை நாடு முழுவதும் மின்னணு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்ததோடு, இது முற்றிலும் துல்லியமாக இருக்கும் என்றும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிப்படையை வழங்கும் என்றும் அவர் கூறினார்.


100% துல்லியமான தரவு


நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 100 சதவீதம் துல்லியமான கணக்கீடுகளை எதிர்பார்க்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். 'அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு,  கணிணி முறையில் நடத்தப்படும். இதன் மூலம், 100 சதவீதம் துல்லியமான கணக்கீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில், அடுத்த, 25 ஆண்டுகளுக்கு, நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் வகுக்கப்படும்' என்றார்.


மேலும் படிக்க | இந்தியாவில் 4வது கோவிட் அலை உருவாகுமா; ஐஐடி பேராசிரியர் கூறுவது என்ன


மக்கள் தொகை கணக்கெடுப்பு பல வழிகளில் முக்கியமானது என்றும், மக்கள்தொகை அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் கொண்ட அஸ்ஸாம் போன்ற மாநிலத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார். கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை தாமதமானது என அவர் தெரிவித்தார்.


அஸ்ஸாமின் அமிங்கானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டிடத்தை அமித் ஷா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் படிக்க | 4-ஆம் அலை வேண்டாம் என்றால் மாஸ்க் வேண்டும்! பேரவையிலும் எதிரொலித்த மாஸ்க் விவகாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR