போர்ட் பிளேயர்: நிகோபார் தீவுகளில் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது இன்று காலை நள்ளிரவில் 1.59 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவுகோலில் சுமார் 5-ஆக பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.