முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரில் ஆந்திராவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விருதின் பெயரை, மாற்றி தனது தந்தை YSR பெயரில் வழங்க முதல்வர் ஜெகன் மோகன், முடிவு செய்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தனது முடிவை திரும்ப பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுதந்திர போராட்ட வீரர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளை முன்னிட்டு வரும் நவம்பர் 11-ஆம் தேதி ஆந்திராவில், 10-ஆம் வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரில், ''ஏபிஜே அப்துல் கலாம் பிரதிபா புரஸ்கார்'' விருது வழங்கப்பட்டு வந்தது. 


இந்நிலையில், இந்த விருதின் பெயர் ''YSR வித்யா புரஸ்கார்'' என்று மாற்றி வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவரான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு கடும் கண்டனம் குறிப்பிட்டிருந்தார்.



இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "தனது முன்னோடியான உழைப்பு மற்றும் வாழ்க்கை மூலம் தேசத்திற்காக அதிகம் பணியாற்றியுள்ளார் டாக்டர் கலாம். கலாமிற்கு பெருமை சேர்க்கும் 'ஏபிஜி அப்துல் கலாம் புரஸ்கார்' விருதை தன் சுய விருப்பத்திற்காக 'ஓய்எஸ்ஆர் வித்ய புரஸ்கார்' விருது என ஜெகன் மாற்றியுள்ளார்'' என குறிப்பிட்டுள்ளார்.


சந்திரபாபுவை தொடர்ந்து ஆந்திர அரசின் முடிவுக்கு பாஜக மற்றும் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தற்போது இந்த பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இதுகுறித்து, ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில்., பெயர் மாற்றம் குறித்து முடிவு முதல்வர் ஜெகன் மோகன் கவனத்திற்கு கெண்டுச்செல்லப் பட்டது, அவரது கவனத்திற்கு சென்றவுடன் அதனை திரும்ப பெற ஜெகன் உத்தரவிட்டார். மேலும், விருதுகள், கலாம், மஹாத்மா காந்தி, அம்பேத்கர் பெயரில் தான் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.