ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை; பலி 8
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆந்திர கடற்கரையை ஓட்டியுள்ள வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இரு மாநிலங்களிலும் பல முக்கிய இடங்கள் மற்றும் வணிக நகரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரில் நேற்று மாலை முதல் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகளில் தேங்கும் நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்த இரு நாட்களுக்கு கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மீட்புபணிக்கு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளன.