அமராவதி ஒரு பொருத்தமான மாநில தலைநகராக இருக்க முடியுமா?
அமராவதி பொருத்தமான மாநில தலைநகராக இருக்க முடியுமா என்று சோதிக்கவும், அமராவதியில் தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்யவும் ஆந்திர அரசு நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது!
அமராவதி பொருத்தமான மாநில தலைநகராக இருக்க முடியுமா என்று சோதிக்கவும், அமராவதியில் தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்யவும் ஆந்திர அரசு நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது!
ஊடக அறிக்கைகளின் படி, மாநிலத்தின் அனைத்து வகையான வளர்ச்சிக்கும் ஒரு விரிவான மூலோபாயத்தை குழு பரிந்துரைக்கும் என தெரிகிறது.
இந்த குழுவில் புதுடெல்லியின் ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சரைச் சேர்ந்த டாக்டர் மகாவீர், நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடுபவர் டாக்டர் அஞ்சலி மோகன், பேராசிரியர் சிவானந்த சுவாமி, CEPT, அகமதாபாத், டெல்லி ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் மற்றும் டாக்டர் கே.வி. அருணாச்சலம் (சென்னையின் ஓய்வு பெற்ற தலைமை நகர திட்டமிடுபவர்.) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் வெள்ள மேலாண்மை குறித்த நிபுணரும் இடம்பெற்றுள்ளனர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.என்.ராவ் தலைமையிலான இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க ஆறு வார கால அவகாசம் பெற்றள்ளது.
சமீபத்திய வெள்ளத்திற்குப் பின்னர், கிருஷ்ணா நதியைச் சுற்றியுள்ள அமராவதி ஒரு பாதுகாப்பான இடம் இல்லை என்று மாநில அரசு அறிவித்திருந்தது. அமராவதியின் நிலை நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், தலைநகரத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை மாநில அரசு தயக்கம் காட்டி வரவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.