ஆந்திர மாநிலத்திற்கென தனி உயர்நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2014-ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிறிந்ததை அடுத்து, இவ்விரு மாநிலங்களுக்கும் பொதுவாக செயல்பட்டு வந்த ஐதராபாத் உயர்நீதிமன்றம் தெலுங்கானா எல்லையில் சேர்ந்து. இதுநாள் வரையில் இரண்டு மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றமும் ஐதராபாத் மாநிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஆந்திராவிற்கென தனி உயர்நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏகே சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் அடங்கிய அமர்வு அனுமதியளித்துள்ளது.


ஆந்திராவில் புதிய உயர்நீதிமன்றம் அமைக்க நீதிபதிகள் அடங்கிய ஆய்வுக் குழு ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் இந்த புதிய உயர்நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் 25-வது உயர்நீதிமன்றமாக செயல்படவுள்ள ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக தற்காலிக கட்டடத்தில் இயங்கவுள்ள உயர்நீதிமன்றம், பின்னர் தலைநகர் அமராவதிக்கு மாற்றப்படவுள்ளது. அமாராவதியில் உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதுடன், நீதிபதிகளுக்கான குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது.