Andhra Pradesh Woman Suicide For Trolls: தினந்தினம் பல பிரச்னைகள் நாட்டில் நடந்துவந்தாலும், இணையத்தில் நடக்கும் அத்துமீறல்களும் தற்போது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக, நடிகர்களின் ரசிகர்களின் மோதலில் தொடங்கி அரசியல் கட்சிகள் வரை சமூக வலைதளங்கள் எங்கும் ஆபாச கருத்துகளும், கொச்சையான புகைப்படங்களும் நிறைந்த பதிவுகளை நாம் காண முடியும். இதில் தனிநபர் தாக்குதல் போக்கும் அதிகரித்திருப்பதை நம்மால் மறுக்க முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நவீன யுகத்தில் இந்த தனிநபர் தாக்குதலில் இருந்து ஒருவர் தப்பிப்பதோ, அதில் பாதிக்கப்பட்டால் அதனை கடந்து செல்வதோ எளிதானது இல்லை. அந்த வகையில், ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்மணி சமூக வலைதளங்களில் தன்மீது நடத்தப்பட்ட தனிநபர் தாக்குதலை பொறுத்துக்கொள்ள இயலாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.


கீதாஞ்சலிக்கு நடந்த கொடுமை


ஆந்திரா மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி நகரில் மாநில அரசின் ஜெகனண்ணா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 32 வயதான கீதாஞ்சலி என்ற பெண் அவரின் வீட்டுக்கான பட்டாவை பெற்றுள்ளார். பட்டாவை பெற்றதுடன் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தான் ஜெகன்மோகன் ஆட்சியில் வீடு கிடைத்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். 


மேலும் படிக்க | CAA இந்தியாவின் உள்விவகாரம், எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் -அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி


மேலும், மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் பலனடைந்துள்ளனர் எனவும் கூறியிருந்தார். குறிப்பாக, அந்த பேட்டியில் அந்த பெண்மணி,"நான் மேடையில் வீட்டுக்கான பத்திரத்தை பெறுவேன் என நம்பவே இல்லை. வரும் தேர்தலில் வேறு யாருக்கு வாக்களிக்கப்போகிறேன்?, ஜெகனண்ணாவுக்குதான் எனது ஓட்டு" என தெரிவித்திருந்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, அந்த பெண் தொலைக்காட்சிக்கு அளித்த வீடியோவின் பதிவை பகிர்ந்த அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்து அந்த பெண்மணியை "நட்சத்திர பிரச்சாரகர்" எனவும் குறிப்பிட்டது. 


முதலமைச்சர் இரங்கல்


இதனை தொடர்ந்து, ஆந்திராவின் எதிர்க்கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் தொண்டர்கள் என கூறப்படும் சிலர் சமூக வலைதளங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசிய கீதாஞ்சலி மீது தனிநபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தனிநபர் தாக்குதலால் மனமுடைந்துபோன கீதாஞ்சலி தற்கொலை மேற்கொண்டு உயிரிழந்தார். 


மார்ச் 7ஆம் தேதி தற்கொலை மேற்கொண்ட நிலையில், நான்கு நாள்களுக்கு பின் குண்டூர் பொது மருத்துவமனையில் மார்ச் 11ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இவரின் உயிரிழப்பு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஜெகன்மோகனும் இந்த செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக கூறிய நிலையில், தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். குறிப்பாக, 20 லட்சம் ரூபாயை கீதாஞ்சலியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக அறிவித்துள்ளார்.


மேலும், முதலமைச்சர் ஜெகன்மோகன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,"கீதாஞ்சலியின் கணவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் அவரை உருவக் கேலி செய்து, மன ரீதியாக துன்புறுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோரிக்கை வைத்துள்ளார்" எனவும் குறிப்பிட்டிருந்தார். சைபர் குற்றப்பிரிவு போலீசாரும் இதுவரை 7 பயனர்களை கண்டறிந்துள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | முன்னாள் முதலமைச்சர் கவிதா மகள் கைது... மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ