பெங்களூரு: முந்தைய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா முடிவு செய்துள்ளது. அண்மையில் கர்நாடகாவில் பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன் அடுத்தபடியாக, மதமாற்றத்தைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட சட்டத்தை ரத்து செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெற,முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.



முந்தைய பாஜக அரசு, 'விருப்பம்', 'வற்புறுத்தல்', 'பலவந்தம்', 'மோசடி வழிமுறைகள்' மற்றும் 'வெகுஜன மதமாற்றம்' மூலம் மதமாற்றம் செய்வதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம் டிசம்பர் 2021 இல் கர்நாடக சட்டமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


அதன்பிறகு, இந்த மசோதாவை அமல்படுத்துவதற்காக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்திற்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மே 17, 2022 அன்று ஒப்புதல் அளித்தார்.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதிக்க வேண்டும்-அமலாக்கத்துறை அதிரடி மனு


நடைமுறையில் இருந்த அவசரச் சட்டத்திற்குப் பதிலாக, செப்டம்பர் மாதம் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதன் பின்னணியில், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, பாஜக கொண்டுவந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த 'பசு வதை தடுப்பு' சட்டத்தை தனது அரசாங்கம் திருத்தலாம் என்று கர்நாடக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே.வெங்கடேஷ் சூசகமாக தெரிவித்த சில வாரங்களில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.


சமீபகாலமாக, வயதான கால்நடைகளை பராமரிக்கவும், இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்தவும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | சிறை கன்ஃபார்ம்..? செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான எண் வழங்கப்பட்டது..!


"ஒருவர் எருமை மாடுகளையும், காளைகளையும் வெட்டலாம் என்றால், பசுக்களை வெட்டுவதில் என்ன தவறு?" மாநில விவசாயிகளின் நலன் கருதி மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.


இதனிடையே, கேபி ஹெட்கேவார் குறித்த பாடத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கர்நாடக கல்வி அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார். "கடந்த ஆண்டு பாஜக அரசு என்ன மாற்றங்களைச் செய்திருந்தாலும், நாங்கள் அதை மாற்றி, கடந்த ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை இருந்ததை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளோம்" என்று பங்காரப்பா கூறினார்.


இது தொடர்பாக கர்நாடக முன்னாள் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கடுமையாக சாடியுள்ளார். "காங்கிரஸ் கட்சி, முஸ்லிம்களின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக இதை முன்னெடுத்து இருக்கின்றனர், சித்தராமையாவின் அரசு இந்துக்களுக்கு எதிரானது... அவர்கள் மீண்டும் ஹிஜாபை அறிமுகப்படுத்தலாம்... சிறுபான்மையினரின் வாக்குகளை கவர்வதற்காக அனைத்தையும் அரசியலாக்கவும் விரும்புகிறார்கள்" என்று அவர் சாடியுள்ளார்.


 மேலும் படிக்க | Income Tax: வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனம்... இவர்கள் 30% வரி கட்ட வேண்டும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ