தன் மீது நடிகை பாயல் கோஷ் கூறியுள்ள பாலியல் புகார் ஆதாரமற்றவை என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல பாலிவுட் நடிகை சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவுத் (Kangana Ranaut) கேள்வி எழுப்பிய வழக்கில் இயக்குனர் அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.


இதை தொடர்ந்து, நடிகை பயல் கோஷ் தனக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் சனிக்கிழமை (செப்டம்பர் 19) தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். 


இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "ஆஹா, நீங்கள் நீண்ட காலமாக என்னை மௌனமாக்க முயன்றீர்கள். எந்த பிரச்சினையும் இல்லை. என்னை மௌனமாக்கும் போது, மற்றவர்களும் பொய்யில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் பொய் சொல்லிக்கொண்டே இருந்தீர்கள். கொஞ்சம் கண்ணியமாக இருங்கள் மேடம். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.



அவரது அடுத்த ட்வீட், "என் மீதான குற்றச்சாட்டில் நீங்கள் என்னுடன் பணியாற்றியவர்களையும் பச்சன் குடும்பத்தினரையும் இழுக்க முயன்று தோல்வி அடைந்துள்ளீர்கள். மேடம், நான் இரண்டு முறை திருமணம் செய்துள்ளேன். அது என் குற்றமென்றால் ஏற்றுக்கொள்கிறேன். அதோடு நிறைய அன்பு செலுத்தியதையும் ஏற்றுக்கொள்கிறேன். யாரிடமும் ஒரு போதும் தவறாக நடந்து கொண்டது இல்லை. 


ALSO READ | என்னுடைய எதிரிகளின் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க எமன் உயிர்பிச்சை கொடுத்தார்- Anurag Kashyap


அது போன்ற செயல்களை ஊக்குவிப்பதும் இல்லை. உங்கள் வீடியோவை பார்க்கும்போது அதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. நீங்கள் ஆங்கிலத்தில் பேசி இருந்தாலும் இந்தியில் பதில் சொல்வதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு இயக்குனர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார். 


தேரோடும் வீதியிலே படம் மூலம் தமிழ் திரையுலகிலும் பயணம் செய்த மேற்கு வங்க ஹீரோயின் பாயல் கோஷ். தொடர்ந்து தெலுங்கு, பஞ்சாபி, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் கஷ்யப் தன்னை வீட்டிற்கு வரவழைத்து பலவந்தப்படுத்த முயன்றதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன் தடுக்க முயன்ற தன்னிடம் இதெல்லாம் சாதாரண விஷயம் என்று அனுராக் கஷ்யப் கூறியதாகவும் பாயல் தெரிவித்தார்.



இதுகுறித்து பேசிய பாயல் பல நாட்களாக இது குறித்து பேச நினைத்ததாகவும், தற்போது #METOO இயக்கம் பற்றி பேசும்போது இதனை பேசியதாகவும், இந்த ட்வீட்டால் பட வாய்ப்பு கிடைக்காது, அதை நீக்குங்கள் என்று தன் மேனேஜர் உள்பட பலர் தெரிவித்ததால் அந்த ட்வீட்டை நீக்கியதாகவும் அனுராக் கஷ்யப் தன்னை ட்விட்டரில் பிளாக் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல் அந்த புகார் வீடியோ வைரலான பிறகு தன் பெற்றோர் போன் செய்து தன்னை திட்டியதாகவும் பாயல் குறிப்பிட்டுள்ளார்.