ஹிமாச்சல் பிரதேசத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில், ஹிமாச்சலில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்களும் அங்குதான் முகாமிட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும், ஹிமாச்சல் பிரதேசத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பிலாஸ்பூர் நகரில் இன்று அவர் பரப்புரை செய்துவந்தார். அப்போது, குறுகலான சாலை ஒன்றில் பேருந்து ஒன்று சிக்கியதால் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராமப்பகுதியின் அந்த  குறுகலான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து பழுதாகி நின்றுள்ளது. 


மேலும் படிக்க | G20 அமைப்புக்கு தலைமை ஏற்கும் இந்தியா... லோகோ, இணையதளத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!



அந்த பேருந்து முழுவதும் பயணிகள் இருந்ததால், சிக்கல் அதிகமாகியுள்ளது. அந்த போக்குவரத்து நெரிசலில், அனுராக் தாக்கூரின் கான்வேவும் சிக்கியுள்ளது. போக்குவரத்தை சீராக்க மக்கள் முயன்றுகொண்டிருந்தபோது, அமைச்சர் அனுராக் தாக்கூர் காரில் இருந்து இறங்கி பேருந்தை தள்ளிய மக்களுக்கு உதவினார்.  


தொடர்ந்து, பேருந்து ஓட்டுநரிடமும், நடத்துநரிடமும் அமைச்சர் அனுராக் தாக்கூர் பேருந்தின் நிலைமை குறித்து உரையாடினார். போக்குவரத்து நெரிசல் சீரான பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டார்.  அவர் பேருந்தை தள்ளும் வீடியோவை கட்சியினரும், அங்கிருந்த சிலரும் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகியும் வருகிறது. 


ஹிமாச்சல் பிரதேசத்தில் நவ. 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | மாணவியை திருமணம் செய்துகொள்ள ஆணாக மாறிய ஆசிரியை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ