திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களையும் விதமாக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டண தரிசனமும் இருக்கிறது. சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே புக் செய்து கொள்ள முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் (தமிழ் புத்தாண்டு 2023) வழிபாடு நடத்துவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மார்ச் மாதம் 27ஆம் தேதி காலை 11 மணி முதல் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று அறிவித்துள்ளது.


மேலும் படிக்க | மீண்டும் எகிறும் கொரோனா, 24 மணி நேரத்தில் இவ்வளவு பாதிப்பா?



அதுமட்டுமின்றி ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் https://tirupatibalaji.ap.gov.in/#/login செய்வதன் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டுள்ளனர்.



திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி
* திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://tirupatibalaji.ap.gov.in/#/login திறக்கவும்.
* இங்கு காத்திருக்க வேண்டிய நேரம் 10 நிமிடங்கள் வரை ஆகலாம்.
* அடுத்து திறக்கும் பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும்.
* கேப்ட்சா குறியீட்டை பெற்றவுடன், அதை உள்ளிடவும்.
* இப்போது ஜெனெரேட் ஓடிபி என்பதை கொடுக்கவும்.
* உங்கள் மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஆறு இலக்க ஓடிபி ஐ உள்ளிட்டு லாகின் கொடுக்கவும்.
* இப்போது உங்கள் காலெண்டர் திறக்கும்.
* அதில் நீங்கள் விரும்பும் தேதிகளை தேர்ந்தெடுக்கவும்.
* அங்கு பச்சை நிறத்திற்கான வண்ணக் குறிப்பு கிடைக்கும். அது காலியாக இருக்கும் இடங்களை குறிக்கிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... டிஏ ஹைக்கை தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், கணக்கீடு இதொ!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ