புதுடெல்லி: மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தற்போது புவி அறிவியல் அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ரிஜிஜுவுக்கு பதிலாக அர்ஜூன் ராம் மேக்வால் புதிய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜுவுக்குப் பதிலாக சட்ட அமைச்சராக சுயேச்சையாக பொறுப்பு வகிப்பார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த செய்தியை பிடிஐ செய்தி நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.



மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியான ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது: பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | Karnataka CM: முதல்வராய் முந்தும் சித்தராமையா! துணை முதல்வராகும் டிகே சிவக்குமார்


“பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி, மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களிடையே பின்வரும் இலாகாக்களை மறுஒதுக்கீடு செய்வதில் இந்தியக் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார். அமைச்சர்கள்:- (i) புவி அறிவியல் அமைச்சகத்தின் இலாகா ஸ்ரீ கிரண் ரிஜிஜுவுக்கு ஒதுக்கப்பட்டது. (ii) ஸ்ரீ அர்ஜுன் ராம் மேக்வால், அமைச்சர் ஸ்ரீ கிரண் ரிஜிஜுவுக்குப் பதிலாக, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை அமைச்சராக சுயாதீனப் பொறுப்பை ஏற்கிறார்” என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.


உச்சநீதிமன்றம் மற்றும் கொலிஜியம் குறித்து, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் இருந்து அவரது இலாகா பறிக்கப்பட்டுள்ளது.


அமைச்சருடைய கருத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி பல நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு குறித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் பொது நிலைப்பாட்டை ஏற்காத உச்ச நீதிமன்றம், “நாட்டின் சட்டத்தை கடைபிடிக்க” மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது என்றும், “ஒட்டுமொத்த அமைப்பையும் ஏமாற்ற முடியாது” என்று  தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள்ள நிலையில் தற்போது அவசரம் அவசரமாக மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | SC verdict: ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு!


ஜூலை 8, 2021 அன்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக ரிஜிஜு பதவியேற்றார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக, இந்தியாவில் நீதி நிர்வாகத்திற்கு ரிஜிஜு பொறுப்பேற்றார். சட்டத்தின் வரைவு மற்றும் சட்ட அமைப்பின் நிர்வாகத்திற்கும் பொறுப்பு ஏற்ற கிரன் ரிஜுஜூ, இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.


நரேந்திர மோடி அரசாங்கத்தின் மிக உயரிய அமைச்சர்களில் ஒருவராகவும், பிரச்சனைகளைத் தீர்ப்பவராகவும் அறியப்பட்ட ரிஜிஜு, கேபினட் அந்தஸ்துடன் சட்ட அமைச்சகத்திற்குப் பதவி உயர்வு பெற்று ஒரு வருடத்திற்குள்ளாகவே புவி அறிவியல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


2014 முதல் 2019 வரை உள்துறை அமைச்சராகவும், 2019 முதல் 2021 வரை சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சராகவும், 2019 முதல் 2021 வரை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுக்கான மாநில அமைச்சராகவும் (சுயாதீனப் பொறுப்பு) பணியாற்றினார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Maruti Wagon R: குறைந்த விலை, மாஸ் அம்சங்கள்... இந்த கார் மக்களை கவர்ந்த காரணங்கள் இவைதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ