SC verdict: ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு!

SC To Give Verdict On Jallikattu Today: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 18, 2023, 10:36 AM IST
  • ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
  • ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது
  • தீர்ப்பை எதிர்நோக்கும் தமிழ்நாடு
SC verdict: ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு! title=

புதுடெல்லி: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 5 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் முக்கிய அம்சம் என்றும், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தையும், நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கவுமே ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்ற தமிழ்நாடு அரசு வாதம் போலியானது என பீட்டா அமைப்பு தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி இறுதி விசாரணை நிறைவடைந்ததால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி கே.எம்.ஜோசப் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவர் விசாரித்த முக்கியத்துவம் வாய்ந்த ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 

மேலும் படிக்க | Karnataka: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா? ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் நடத்தப்படும் காளைகளை அடக்கும் இந்த வீர விளையாட்டில், விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டிய  பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

 நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதனை விசாரித்து வந்த நிமிகலையில், இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ அறிக்கையில், "ஜல்லிக்கட்டு" என்பது ஒரு கலாச்சார நிகழ்வு எனவும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளை ஜல்லிக்கட்டு மீறவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க | மூளையை உற்சாகமாக செயல்பட வைக்கத் தேவையான வைட்டமின்கள்

தமிழக அரசின் எழுத்துப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்கள் தொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு என்பது ஒரு கலாச்சாரம் என்று கூறுவதால் மட்டும் அதனை கலாச்சாரமாகக் கருத முடியாது எனவும், அதற்கு சில அடிப்படைகள் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

"தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம், இயல்பிலேயே கொடூரமான ஒரு செயலை சட்டப்பூர்வமாக்க முயல்வதாகவும் மனுதாரர்கள் தரப்பு கூறியது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டு வழக்கின் மீதான தீர்ப்பை இன்று வழங்கவிருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு கொண்டாடப்படுவதற்கான காரணங்கள்
கால்நடை வளர்ப்பு என்பது, பெரும்பாலும் செயற்கையான செயலாக மாறிவிட்ட 21ம் நூற்றாண்டில் உழவுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் விலங்குகளின் தேவை விவசாயத்தில் குறிஅந்துவிட்டது. எருதுகள் உள்ளிட்ட ஆண் விலங்குகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு அவசியம் ஆகும்.
 
ஜல்லிக்கட்டு சட்டப் போராட்டம்
விலங்கு உரிமைகள் தொடர்பான சட்டப் போராட்டங்கள் 1990 களில் தொடங்கின. 2007 ஆம் ஆண்டில் இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் உரிமைக் குழு PETA போன்றவை, ஜல்லிக்கட்டு விளையாட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன. அப்போது, ஜல்லிக்கட்டு, சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்பட்டது.

மேலும் படிக்க | ஜூன் 21ம் தேதி பெங்களூருவில் தொடங்கும் SAFF சாம்பியன்ஷிப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை 

தமிழக அரசு, 2009ல் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்தை இயற்றியதன் மூலம், தடையில் இருந்து வெளியேறியது. 2011 ஆம் ஆண்டு, மத்திய அரசு, காளைகளை பயிற்சி மற்றும் கண்காட்சி தடைசெய்யப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்த்தது. மே 2014 இல் போடப்பட்ட ஒரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்தது, அதில் 2011 அறிவிப்பை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்தது.

2017 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம்
ஒரு வருடம் கழித்து, 2015 இல், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெறக் கோரிய தமிழக அரசின் மனுவையும் தள்ளுபடி செய்தது. 2017 ஜனவரியில், ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டம் உலகம் முழுவதும் பிரபலமானது.  
 
ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டம்
அதே ஆண்டு, மத்திய சட்டத்தில் திருத்தம் செய்து மாநிலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அரசாணையை அரசாங்கம் வெளியிட்டது; இந்த ஆணையை எதிர்த்த PETA , இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று வாதிட்டது.

மேலும் படிக்க | புதிய முதல்வர் யார்..? 48 முதல் 72 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: சுர்ஜேவாலா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News