புதுடெல்லி: ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, பாதுகாப்புப் படைகள் இந்த மாத இறுதியில் பயிற்சி முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடுமையான குளிர்காலத்திற்குப் பிறகு கடப்புப் பாதைகள் (passes) மற்றும் பெரும்பாலான பகுதிகள் திறக்கப்படும் போது கோடைகால தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவார்கள். இந்த நேரத்தில் இந்த பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


"லடாக் பகுதியில் இந்த மாத இறுதிக்குள் ஒரு பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது, படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் புரிதலை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சி முகாம் திட்டமிடப்பட்டுள்ளது" என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே!


சீன எல்லையில் லடாக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரில் இந்திய ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (Indo-Tibetan Border Police) மற்றும் இந்திய விமானப்படை (Indian Air Force) ஆகியவை அடங்கும்.


இந்தியப் படைகள் முழு பிராந்தியத்திலும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. இதற்கு காரணம் கடந்த ஆண்டு இந்த சமயத்தில் சீனர்கள் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு, இந்திய எல்லைக்குள் பல பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்தனர்.


சீனா அல்லது வேறு எந்த எதிரியும் நம்மை ஆச்சரியப்படுத்த எந்த வழியையும் நாம் விட்டு வைக்கவில்லை என்று அண்மையில், ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஏ.என்.ஐ யிடம் கூறியிருந்தும் நினைவில் கொள்ளத்தக்கது.


Also Read | Good news! 9.17L அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 30% சம்பள உயர்வு


ஒரு வருடத்திற்கும் மேலாக, கிழக்கு லடாக் துறையில் சீனாவுடன் இந்தியா ஒரு ராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளது மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பிற பகுதிகளில் துருப்புக்களுக்கு இடையே கடுமையான மோதல்களும் ஏற்பட்டது.  .


இறுதியில் சீனா பாங்கோங் த்சோ ( Pangong Tso) ஏரிப் பகுதியிலிருந்து வெளியேற ஒப்புக் கொண்டதால் இரு தரப்பினருக்கும் இடையிலான பதட்டங்கள் குறைந்துவிட்டன. 


இருந்தாலும், இரு தரப்பினரும் இன்னும் துருப்புக்களை முழுமையாக திரும்பி அழைத்துக் கொள்ளவில்லை என்பதால் சிக்கல்கள் தீர்ந்துவிட்டதாக சொல்லிவிட முடியாது.


கோக்ரா (Gogra), ஹாட் ஸ்பிரிங்ஸ் ( Hot Springs) மற்றும் டெப்சாங் சமவெளிகளில் உள்ள பகுதிகளில் பதற்றமான நிலைமையே தொடர்கிறது என்ற சூழ்நிலையில் ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பயிற்சி முகாம் நடைபெறவிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.


Also Read | #MeToo: 'அவர் என் உள்ளாடைகளில் கைகளை வைத்தார்...' நடிகையின் MeToo அனுபவம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR