ஜம்மு-வில் இருந்து டெல்லி செல்லும் Duronto Express ரயிலில் இன்று காலை சினிமா பானியில் ஆயுதங்கள் முனையில் கொள்ளச் சம்பவம் நிகழ்ந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Jammu Tawi-Delhi Sarai Rohilla Express (வண்டி எண் 12266)-ஆனது ஜம்மு-வில் இருந்து புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறது. விடியற்காலை துவங்கி சுமார் 9 மணி நேரம் நிகழும் இந்த பயணத்தில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்வது வழக்கமாகிவிட்டது.


அந்த வகையில் இன்று காலை இந்த ரயிலின் B3 மற்றும் B7 பெட்டியில், 7-லிருந்து 10 பேர் கொண்ட ஆயுதமேந்திய மர்ம கும்பல், ரயில் பெட்டியில் பயணித்த பயணிகளிடம் நகை, பணங்களை கொள்ளையடித்துள்ளனர். 


இந்த விவகாரம் ஆனது கொள்ளச் சமவத்திற்கு பின்னர், பாதிக்கப்பட்ட அஷ்வின் குமார் என்பவர் ரயில்வே காவல்துறையில் தெரிவித்த பின்னரே தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அஷ்வின் எழுத்துப்பூர்வமான புகாரினையும் அளித்துள்ளதாக தெரிகிறது.


குளிர்சாதன பெட்டிகளான இப்பெட்டிகளில் காவலர் பாதுகாப்பு இல்லாமல் பயணம் நிகழ்ந்ததால், இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. 


இச்சம்பவம் தொடர்பாக அஷ்வின் குமார் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ரயிலினுள் துப்பாக்கி, கூர்மையாள ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் சுமார் 10-15 நிமிடத்தில் பயணிகளின் உடமைகளை கொள்ளையடித்து மாயமாகியதாக தனது புகாரில் அஷ்வின் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் ஆனது தற்போது சமூக ஊடகங்களில் கேலி பொருளாக மாறியுள்ளது.