World First Portable Hospital: அயோத்தியில் ராமர் கோவில் திறப்புவிழா நெருங்கிவரும் நிலையில், ஏற்பாடுகள் மும்முரமடைந்துள்ளன. இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ள நிலையில், ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ள பிரான் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவதால், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கவனித்துக் கொள்வது மிகப் பெரிய சவாலான முயற்சியாகும். அதும் வட இந்தியாவில் நடுக்கும் குளிர் நிலவும் இப்போது சுகாதார சவால்கள் அதிக அளவில் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, அயோத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகம் உலகின் முதல் சிறிய மருத்துவமனையை அயோத்திக்கு அனுப்பியுள்ளது. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, மத்திய அரசின் பீஷ்மா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு ஆரோக்ய மைத்ரி கியூப் என்று பெயரிடப்பட்டுள்ளது.


உலகின் மிகச்சிறிய மருத்துவமனை இது என்றும், இதன் மூலம் உலகில் எங்கும் ஆபரேஷன் தியேட்டரை வெறும் 8 நிமிடங்களில் தயார் செய்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கலாம் என்பதும் இதன் சிறப்பு ஆகும். முழு மருத்துவமனையையும் ஒரு மணி நேரத்தில் கட்டிவிடலாம். இந்த மருத்துவமனையை விமானத்தில் ஏற்றி எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். 


இந்த கையடக்க மருத்துவமனைகள் அயோத்தியில் இரண்டு இடங்களில் கட்டப்படும். எனவே தேவைப்படும் சூழ்நிலையில், விபத்து ஏற்பட்டாலும், உடனடியாக சிகிச்சையைத் தொடங்கலாம்.


மேலும் படிக்க | ஆன்மீகப் பயணம்: தமிழகம் வரும் பிரதமர் மோடி! வரவேற்க தயாராகும் தமிழக அரசு


ஆரோக்ய மைத்ரி போர்ட்டபிள் ஹாஸ்பிட்டலை ஒரு சில சிறிய க்யூப்களில் இருந்து தயாரிக்கலாம். இதுபோன்ற இரண்டு க்யூப்கள் அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளன. விமானப்படை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அயோத்தியில் லதா மங்கேஷ்கர் சௌக் மற்றும் டென்ட் சிட்டி ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு மருத்துவமனைகளை தயார் செய்வார்கள்.


ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) தன்மய் ராய் ஆரோக்ய மைத்ரி கியூப் திட்டத்தின் தலைவர் ஆவார். இந்த கையடக்க மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் ஒரு விமானப்படை மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட மொத்தம் 6 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.


 200 நோயாளிகளைக் கையாளும் திறன்: ஆரோக்ய மைத்ரி மருத்துவமனை


ஒரு ஆரோக்யா மைத்ரி கியூப் மருத்துவமனை 400 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மத்திய சுகாதார அமைச்சகத்தின் சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்த கையடக்க மருத்துவமனை தயாரிக்கப்பட்டுள்ளது, இது முதன்முறையாக உலகிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மருத்துவமனை எந்த விதமான பேரிடரின் போதும் 200 பேருக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், ஒரே நேரத்தில் 25 பேருக்கு பரிசோதனைகள் செய்யமுட்யும்.


ஆரோக்கிய மைத்ரி மருத்துவமனையில் (arogya Maitri Hospital) 100 பேரை 48 மணி நேரம் தங்க வைக்கலாம். எந்தவித அவசரநிலை, அறுவை சிகிச்சை, தீ, போர், வெள்ளம், நிலநடுக்கம் என அனைத்து வகையான பேரிடர்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருத்துவமனை துரிதமாக சிகிச்சையளிக்கும்.  


மேலும் படிக்க | Ram temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு நன்கொடை கிடைத்துள்ளது 


36 க்யூப்களால் கட்டமைக்கப்படும் மருத்துவமனை


'ரூபிக்ஸ் கியூப்' (Rubik’s Cube) விளையாடுபவர்களுக்கு இந்த மருத்துவமனையின் அறிவியல் சுலபமாகப் புரியும். ரூபிக்ஸ் கியூப் போன்ற ஒரு மருத்துவமனை எவ்வளவு சிறியதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ரூபிக்ஸ் கியூப் விளையாட்டைப் போன்று 36 சதுர பெட்டிகளில் அடைக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய அவசரகால மருத்துவமனை இது. வானத்திலிருந்து தரையிலோ அல்லது தண்ணீரிலோ எங்கு வேண்டுமானாலும் தூக்கி எறியலாம், அதனால் அது சேதமடையாது.


இந்த மருத்துவமனை கட்டுமானம் ஓராண்டுக்கு முன்னரே துவங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் இணைந்து உருவாக்கிய இந்த மருத்துவமனை, ப்ராஜெக்ட் பீஷ்மா (Project Bhisma) தொடங்கப்பட்டது, இதன் கீழ் இந்த மருத்துவமனை HLL Lifecare உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மருத்துவமனையின் விலை சுமார் 2.5 கோடி ரூபாய்.


இலங்கை மற்றும் மியான்மர் நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசி அன்பளிப்பாக வழங்கப்பட்டது போலவே, இந்த மருத்துவமனையும் இந்திய அரசால் இந்த இரு நாடுகளுக்கும் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | ராம் லல்லாவுக்கு பிரசாதமாகும் 1250 கிலோ லட்டு! ஹைதராபாதில் இருந்து அயோத்திக்கு ஊர்வலம்


ஆரோக்ய மைத்ரி மருத்துவமனை இப்படித்தான் 


இந்த போர்டபிள் மருத்துவமனையைப் பற்றி தெரியாத மருத்துவரோ அல்லது புதிய மருத்துவ நிபுணரோ கூட தயார் செய்யும் வகையில் ஆரோக்கிய மைத்ரி வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்படி இதை கட்டமைப்பது என்பது தொடர்பான முழுத் தகவல் பீஷ்மா செயலியில் உள்ளது, அதனுடன் இரண்டு மொபைல் போன்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஃபோன்கள் ஆஃப்லைன் சிஸ்டத்தில் அதாவது இணையம் இல்லாமல் கூட வேலை செய்ய முடியும்.


பீஷ்மா செயலியில் (Bhishma App) 60 வெவ்வேறு மொழிகளில் முழுமையான தகவல்கள் உள்ளன. இது தவிர RFID குறிச்சொல்லும் உள்ளது. இது இணையம் இல்லாமல் கூட வேலை செய்ய முடியும். எந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்ற தகவல் பெட்டியின் மேல் எழுதப்பட்டிருக்கும். தகவலைப் படிக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு பெட்டியின் மேல் வைக்கப்பட்டுள்ள QR குறியீட்டை RFID மூலம் ஸ்கேன் செய்து தகவலைத் தெரிந்துக் கொள்ளலாம்.


QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், எந்த பெட்டியில் மருந்துகள் உள்ளன, அவற்றின் காலாவதி தேதி என்ன என்பதை அறியலாம். அதேபோல, எந்த பெட்டியில் எலும்பு முறிவு சிகிச்சைக்கான கருவிகள் உள்ளன, எந்த பெட்டியில் எக்ஸ்ரே செய்யும் வசதி உள்ளது என அனைத்து தகவல்களும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு எவ்வளவு செலவானது? நீங்கள் அறியாத தகவல்கள் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ