ஆன்மீகப் பயணம்: தமிழகம் வரும் பிரதமர் மோடி! வரவேற்க தயாராகும் தமிழக அரசு

PM Narendra Modi Visit Tamil Nadu: மூன்று நாள் ஆன்மீகம் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிறகு, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தை குறித்து பார்க்கலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 31, 2024, 06:06 PM IST
ஆன்மீகப் பயணம்: தமிழகம் வரும் பிரதமர் மோடி! வரவேற்க தயாராகும் தமிழக அரசு title=

BJP Mission South: லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி 'மிஷன் சவுத்' திட்டத்தை தொடங்கியுள்ளார். அதேநேரத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை (ஜனவரி 19, வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறார். அதாவது தேர்தல் மற்றும் ஆன்மீகம் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி மூன்று நாட்கள் தங்கும் அவர், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 

தமிழகம் வரும் பிரதமர் மோடி

நாளை (ஜனவரி 19) மாலை 5 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உட்பட பலர் வரவேற்கின்றனர்.

பிரதமர் மோடியின் தமிழக பயணத் திட்டம் விவரம்

ஜனவரி 19 திட்டம்: 
-- மாலை 5 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை

-- சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

-- மாலை 5.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்ஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

-- அடையாறு கடற்படை தளத்தில் இருந்து கார் மூலம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.

-- அங்கு கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவை தொடங்கி வைக்கிறார்.

-- அதன் பிறகு இரவு 7.45 மணிக்கு கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.

-- ராஜ் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

-- அதன்பிறகு இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

மேலும் படிக்க - வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் சொன்னது.. நாங்கள் செய்து காட்டியுள்ளோம் -பிரதமர் மோடி

ஜனவரி 20 திட்டம்:
-- கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை விமான நிலையம் செல்கிறார்.

-- காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார்.

-- திருச்சி விமான நிலையதில் இருந்து கார்க் மூலம் சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் செல்கிறார்.

-- காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

-- அங்கிருந்து கார் மூலம் மீண்டும் திருச்சி விமான நிலையம் செல்கிறார்.

-- திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்கிறார்.

-- மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.

-- பிற்பகல் 2.05 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் பிரதமர் கடலில் நீராடுகிறார்.

-- பிற்பகல் 2.10 மணிக்கு ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

-- அதன் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்திற்கு இரவு தங்குகிறார்.

ஜனவரி 21 திட்டம்
-- காலை 10.05 மணிக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுகிறார்.

-- பின்னர் காரில் சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார்.

-- காலை 10.30 மணிக்கு கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

-- அதன்பிறகு ராமர் பாலம் உள்ள இடத்தை பார்வையிடுகிறார்.

-- ராமேஸ்வரத்தில் இருந்து புனித நீரை எடுத்துக்கொண்டு மதுரை விமான நிலையம் செல்கிறார்.

-- மதுரை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 

-- அடுத்த நாள் (ஜனவரி 22) அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார்.

மேலும் படிக்க - ஒவ்வொரு வீட்டிலும் ஸ்ரீராம ஜோதியை ஒளிரச் செய்யுங்கள் -பிரதமர் மோடி சிறப்பு வேண்டுகோள்

லோக்சபா தேர்தல்: பாஜகவின் 'மிஷன் சவுத்' திட்டம் 

லோக்சபா தேர்தல் மற்றும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி தென் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வரிசையில் மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டிக்கு நாளை வருகிறார். முன்னதாக, பிரதமர் மோடி ஜனவரி 16-17 ஆகிய இரண்டு நாட்கள் ஆந்திரா மற்றும் கேரளாவுக்குச் சென்றார். பிரதமர் மோடி தொடர்ந்து தென் மாநிலங்களுக்கு பயணம் செய்வது பாஜகவின் 'மிஷன் சவுத்' திட்டத்தின் ஒரு அங்கம் என்று கூறப்படுகிறது.

தென் இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி

ஜனவரி 2 ஆம் தேதி: பிரதமர் மோடி தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஜனவரி 3 ஆம் தேதி: லட்சத்தீவு மற்றும் கேரளாவுக்கு சென்றார். 

ஜனவரி 16 ஆம் தேதி: ஆந்திரப் பிரதேச சுற்றுப்பயணம் சென்றார்.

ஜனவரி 17 ஆம் தேதி: கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டார். 

ஜனவரி 19 ஆம் தேதி: பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

மேலும் படிக்க - Ramar Temple: ஜன. 22 அன்று தேசிய விடுமுறை? - குடியரசு தலைவருக்கு பறந்த கடிதம் - விரைவில் அறிவிப்பா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News