RBI அதிகாரிகளுடன் அருண் ஜேட்லீ இன்று ஆலோசனை கூட்டம்!
ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கூட்டத்தில் இன்று பங்கேற்க உள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லீ இடைக்கால பட்ஜெட்டிற்குப் பிந்தைய நிலவரத்தை ஆய்வு செய்ய உள்ளார்!
ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கூட்டத்தில் இன்று பங்கேற்க உள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லீ இடைக்கால பட்ஜெட்டிற்குப் பிந்தைய நிலவரத்தை ஆய்வு செய்ய உள்ளார்!
2018-19 ஆண்டிற்கான இடைக்கால ஈவுத் தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி தரவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் ரிசர்வ் வங்கியோ 100 கோடி ரூபாய் மட்டுமே தான் ஒதுக்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து சில வருமான வரி சலுகைகள் அறிவித்த நிதியமைச்சர் அதன் மூலம் ஆண்டுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லாத நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார். 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்றும் இத்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியிட்டு தொடங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையான 2 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றாட வருமானத்தை சார்ந்திருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆயிரத்திற்கு கீழ் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மாதம் 100 ரூபாய் செலுத்தினால் 60 வயதிற்கு பிறகு மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக பெறுவர். பிஎஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண உதவி 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு மதிப்பூதியம் 5 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்படுகிறது. நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 5 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு மற்றும் 12 கோடி விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமை குறித்தும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் அருண் ஜேட்லீ ஆலோசனை நடத்த உள்ளார்.