Delhi: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரது கைதுக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு அமலாக்கத்துறை (ED) அவருக்கு பல சம்மன்களை அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜரானால் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனையடுத்து லோக்சபா தேர்தல் வரை தம்மை கைது செய்ய மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சம்மனுக்கு பதிலளிக்கும் வகையில் அமலாக்கத்துறையிடம் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அவரை கைது செய்ய தடை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் ஒரு வழக்கில் கூட விசாரணை அமைப்பு முன் ஆஜராகவில்லை. இந்நிலையில், தண்டனை நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். 


இந்த வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு, 'முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய விரும்பவில்லை என்றும், விசாரணைக்கு தான் அழைக்கிறேன் என  அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க - குடியுரிமை திருத்தச் சட்டம்: 'உரிமைகள் பறிப்பு' பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்


அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம்


முதல்வர் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், 'கெஜ்ரிவாலை கைது செய்ய ED விரும்புகிறது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் போதெல்லாம் சம்மன்கள் அனுப்பப்படுகிறது என்றார். அதே சமயம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஏதேனும் உறுதியான ஆதாரங்கள் இருந்தால், அதைக் கொண்டு வந்து காட்டுங்கள். 


தனது மனுதாரர் ED முன் ஆஜராவார். ஆனால் இந்த வழக்கின் கட்டாய நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு தேவை என்று கூறினார். ஏனெனில் தேர்தல் நெருங்கும் போது அவரை (கெஜ்ரிவால்) கைது செய்ய ஏஜென்சியின் நோக்கம் தெளிவாக உள்ளது என்று முதல்வர் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறினார்


லோக்சபா தேர்தல் வரை அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது என்பதே எங்களது கோரிக்கை. அவர் கைது செய்யப்பட்டால் தான் புலனாய்வு அமைப்புகளுக்கு திருப்தி கிடைக்கும் என்றால் ஜூன் மாதம் அவரைக் கைது செய்யலாம். ஆனால் அதுவரை தண்டனை நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.


சிறிது காலம் கழித்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து நீதிபதி சுரேஷ் குமார் கைட் மற்றும் நீதிபதி மனோஜ் ஜெயின் அமர்வு அவரது மனு மீதான விசாரணையை சிறிது காலத்திற்கு ஒத்திவைத்தது. இது இடைக்கால நிவாரணம் கோரி கெஜ்ரிவாலின் விண்ணப்பம், அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரணைக்காக அனுப்பிய பலமுறை சம்மன்களை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவின் ஒரு பகுதியாகும்.


மேலும் படிக்க - Delhi Revenue: ஆம் ஆத்மி கட்சிக்கு ஆப்பு வைத்த மதுபான விற்பனை! இப்போது ஆதாயமாக மாறுகிறது


நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியது.. 


இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்க தயாரா என்று கேட்டது. இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என்று கூறியது. சட்டத்தை மீறி நடக்க முடியாது. முதல்வருக்கும், சாமானியருக்கும் சட்டம் ஒன்றுதான்  எனக் கூறியது.


அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவாரா?


இருதரப்பு வாதங்களை கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, "கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்க முடியாது" எனக் கூறியது.


டெல்லி அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான கலால் வரிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் மற்றும் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பானது. இந்தக் புதியா கலால் கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் நீதிமன்ற காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க - Arvind Kejriwal: என்னை பயங்கரவாதி போல் பாஜக நடத்துகிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ