புதுடெல்லி: மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளனர். கடந்த 9 மணி நேரமாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பல்வேறு அச்சங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். முதலில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தை சமூக வலைதளங்களில் நள்ளிரவில் தொடர்ந்து ட்வீட் செய்த கட்சியினர், சிறிது நேரத்திற்கு முன்பு கெஜ்ரிவாலின் வீட்டை சுற்றி வளைத்த போலீஸார் அதிக அளவில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தற்போது கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தின் இரு கதவுகளும் திறக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் 6 ஃபிளாக் ஸ்டாஃப் ரோட்டில் வசிக்கிறார், அங்கு நடமாடுவதற்கு எந்த தடையும் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாலைகள் மூடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் புகார்


டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு செல்லும் பாதை அனைத்து பக்கங்களிலும் காவல்துறையால் மூடப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. முதல்வர் இல்லத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. முதல்வரின் பணியாளர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி கூறியது. ஆனால் கட்சியின் கூற்றுக்கு மாறாக, முதல்வர் மாளிகைக்கு செல்லும் இரு சாலைகளும் மூடப்படவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் (Arwind Kejriwal) வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்யக்கூடும் என ஆத்மி கட்சி அச்சம் தெரிவித்துள்ளது.


தேர்தலில் செலவிடப்பட்ட 338 கோடி ஊழல் பணம் 


டெல்லி மதுபான ஊழலில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ED 3 சம்மன்களை அனுப்பியுள்ளது, ஆனால் கெஜ்ரிவால் ஒரு முறை கூட ஆஜராகவில்லை. கோவா தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.338 கோடி ஊழல் பணத்தை செலவிட்டதாக ED குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிடம் விசாரணை நடத்துமாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க | SIP Investment Calculator: 5000 ரூபாயை 20 லட்சம் ரூபாயாக மாற்றும் சூத்திரம்!


EDக்கு எழுதிய கடிதத்தில் கெஜ்ரிவால் தெரித்துள்ள கருத்து


இப்போது கெஜ்ரிவால் ED க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். ED இன் நடத்தை தன்னிச்சையானது  என்பதோடு வெளிப்படையானது அல்ல என் குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், தன்னை விசாரணைக்கு அழைத்ததன் காரணம் என்ன என்று கேட்டுள்ளார். இதனுடன், சம்மன் அனுப்பியதன் நோக்கம் விசாரணை அல்லது எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ED முன் ஆஜராகாததற்கான காரணத்தையும் கேஜ்ரிவால் தனது கடிதத்தில் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் மும்முரமாக இருப்பதாகவும், ஜனவரி 26ம் தேதிக்கு தயாராகி வருவதாகவும் அவர் கூறுகிறார். கெஜ்ரிவால் தனது கேள்விகளின் பட்டியலை அனுப்புமாறு ED ஐக் கேட்டுக்கொண்டார்.


ED சம்மனைப் பெற்று ஓய்வெடுக்க சென்ற கெஜ்ரிவால் 


டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் புதன்கிழமை ED முன் ஆஜராகவில்லை. ED அவருக்கு மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பி ஜனவரி 3 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்தது. முன்னதாக, கெஜ்ரிவாலை நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு ED கேட்டுக் கொண்டது. இருப்பினும், கெஜ்ரிவால் ED முன் ஆஜராக மறுத்துவிட்டார். இந்த இரண்டு சம்மன்களும் சட்டவிரோதமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கூறினார். டிசம்பர் 21 அன்று சம்மனைப் பெற்ற பிறகு, கேஜ்ரிவால் பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூருக்கு 10 நாட்கள் ஓய்வெடுக்க சென்றிருந்தார். மக்களவைத் தேர்தலில் கெஜ்ரிவாலை விலக்கி வைக்கவே, அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


மேலும் படிக்க | வரி செலுத்துவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வருமான வரி விதிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ